news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

அமைச்சர் கீர்த்தனாவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி

நெகிழ்ச்சியான பதிவு...

31

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

’ஒரு பெண்ணின் பணியை விமர்சிக்க முடியாதபோது, அவரது உடலைப் பற்றி பேசுவது அரசியல் விமர்சனம் அல்ல; அது பிற்போக்குத்தனமான மனநிலையின் வெளிப்பாடு,’ என தவெக எம்எல்ஏ கனிமொழி கூறி உள்ளார்.

தவெக எம்எல்ஏ பதிவு
இந்த நிலையில், இதுதொடர்பாக தவெக எம்எல்ஏ கனிமொழி கூறி இருப்பதாவது;
என் அன்பு தங்கை அமைச்சர் கீர்த்தனா collarbone அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் 20 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்திய நிலையிலும், 4 நாட்களிலேயே மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்பினார். மருத்துவமனை படுக்கையில் இருந்தபோதும், முதலமைச்சரின் லண்டன் பயணத்திற்கான ஏற்பாடுகள் சரியாக நடைபெறுகிறதா? என்பதில்தான் அவரது கவனம் இருந்தது.

ஆனால், அவர் சில நாட்கள் பணிக்கு வராததைப் பற்றி பேசும்போது, அவரது உடல்நிலை, காயம் குறித்து சிந்திக்காமல் அதை மாதவிடாயுடன் தொடர்புபடுத்தும் பிற்போக்குத்தனமான சிந்தனை வேதனை அளிக்கிறது. பெண்கள் அவர்களின் உடல் சுழற்சியால் மட்டும் வரையறுக்கப்படுபவர்கள் அல்ல. நாங்கள் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், தாய்கள், மகள்கள். வலி, நோய், காயம் என அனைத்தையும் கடந்து கடமையைத் தொடர்ந்து செய்பவர்கள்.

மன்னித்து விடுங்கள்
ஒரு பெண்ணின் பணியை விமர்சிக்க முடியாதபோது, அவரது உடலைப் பற்றி பேசுவது அரசியல் விமர்சனம் அல்ல, அது பிற்போக்குத்தனமான மனநிலையின் வெளிப்பாடு. பெண்களை அவர்களின் சாதனைகளுக்காக மதிப்போம். அவர்களின் உடலை அரசியல் கேலிக்குரிய பொருளாக மாற்றுவதை நிறுத்துவோம்.

பெண்கள் இதைவிட சிறந்த மரியாதைக்கு உரியவர்கள். தமிழ்நாடும் இதைவிட சிறந்த அரசியல் பண்பாட்டுக்கு உரியது. என்னை மன்னித்துவிடுங்கள் கீர்த்தனா, இதை ரகசியமாக வைத்திருக்கவே நீங்கள் விரும்பினீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், உங்கள் அர்ப்பணிப்பை பார்த்த ஒரு சகோதரியாக இதை சொல்ல வேண்டிய கடமை எனக்கு உள்ளது.
இவ்வாறு தவெக எம்எல்ஏ கனிமொழி கூறி உள்ளார்.

லண்டன் பயணத்தில்...
முதலமைச்சர் விஜய், முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் பயணம் மேற்கொண்டார். இதில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா செல்லாதது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்ததன.
இதுகுறித்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, ’தொழில்துறை அமைச்சருக்கு (கீர்த்தனா) அந்த நான்கு நாட்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரவில்லை,’ என கூறி இருந்தார்.

Related Link
நடிகை ராதா புகாருக்கு நடிகை அம்பிகா மறுப்பு

நடிகை ராதா புகாருக்கு நடிகை அம்பிகா மறுப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஏமன் நாட்டின் மலைப்பகுதிகளை கைப்பற்ற முயற்சி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved