news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

50 ஆண்டுகால இசை பயணம், இசைஞானிக்கு கவுரவம்

சிறப்பு தபால்தலை வெளியீடு

28

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
50 ஆண்டுகால இசை பயணம், இசைஞானிக்கு கவுரவம்

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைப் போற்றும் வகையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நாடாளுமன்றத்தில் சிறப்பு கவுரவம் வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் இசைஞானி
இசைஞானி இளை​ய​ராஜா, தற்​போது ஆஸ்​திரேலி​யா​வின் பல்வேறு நகரங்​களில் இசைக் கச்​சேரி​களை நடத்தி வரு​கிறார். இந்த சூழலில் விக்​டோரியா மாகாண அரசு சார்​பில் மெல்​போர்ன் நகரில் உள்ள “பார்​லிமென்ட் ஆப் விக்​டோரி​யா” அவை​யில் இசைஞானி இளை​ய​ராஜாவுக்கு பாராட்டு விழா நடை​பெற்​றது. அப்​போது அவரின் 50 ஆண்டுகால இசை பயணத்தை பாராட்டி விக்​டோரியா மாகாண அரசு சார்​பில் சிறப்பு தபால் தலை வெளி​யிடப்​பட்​டது. மாகாண நிதித் துறை அமைச்​சர் என்​வர் எர்​டோகன் சிறப்பு தபால் தலையை வெளி​யிட இசைஞானி இளை​ய​ராஜா பெற்​றுக் கொண்​டார். ஆஸ்​திரேலிய தமிழ் வர்த்தகசபை விக்டோரியன் சாப்டர் பொதுச்​செய​லா​ளர் மிதுன் ராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மனதார நன்றி
இந்நிகழ்வில், இசைஞானி இளை​ய​ராஜா பேசி​ய​தாவது:
எனது 50 ஆண்டு கால இசைப் பயணத்தை கவுர​வித்து சிறப்பு அஞ்​சல் தலை வெளி​யிட்ட விக்​டோரியா மாகாண அரசின் நிதியமைச்​சர் என்​வர் எர்​டோகன், விக்​டோரியா அவை​யின் உறுப்​பினர்​கள் அனை​வருக்​கும் மனதார நன்​றியைத் தெரிவித்துக்​கொள்​கிறேன்.

அனைத்து தலைமுறைக்கும்...
என்​னுடைய இசைக்கு உயிர் கொடுத்த மக்​கள், என்​னுடன் இணைந்து பயணித்த கலைஞர்​கள், எனது பாடல்​களை ரசித்​துக் ​கொண்​டிருக்​கும் அனைத்து தலை​முறை​யினருக்​கும் நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.
இவ்​வாறு இளையராஜா நெகிழ்ச்சி தெரிவித்தார்.

Related Link
முதலமைச்சர் விஜயை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் அட்லீ

முதலமைச்சர் விஜயை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் அட்லீ


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தர்மன் படத்துல நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved