Also Watch
Read this
By: Manigandan Raja

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த "பிங்க் ஃபோர்ஸ்" அமைப்பு
தமிழகத்தை போல தலைநகர் டெல்லியிலும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், "சிங்கப்பெண்" சிறப்புப்படை அமைக்கப்பட உள்ளது. இந்த சிறப்புப்படைக்கு "பிங்க் போர்ஸ்" என பெயரிடப்பட்டுள்ளது. தலைநகரில் கடந்த 10 நாட்களில் மட்டும் நான்கு பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவானதை தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மனைவி, 2 இந்து பண்டிதர்களை சுட்டுக் கொன்ற நபர் கைது
உத்தரப் பிரதேசத்தில் மனைவி மற்றும் 2 இந்து பண்டிதர்களை சுட்டுக் கொலை செய்து விட்டு, தனது 3 குழந்தைகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த நபரை போலீஸார் கைது செய்தனர். மேலும், பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த குழந்தைகளையம் மீட்டனர். தனது சொல்லை மீறி வீட்டில் பூஜை செய்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
அருணாச்சல பிரதேசத்தில் எஸ்.ஐ.ஆர். பணி முடிவடைந்து இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், மொத்தம் 6 லட்சத்து 96 ஆயிரம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆண்கள் 3 லட்சத்து 43 ஆயிரத்து 709 பேரும், பெண்கள் 3 லட்சத்து 52 ஆயிரத்து 315 பேரும், 3ம் பாலினத்தைச் சேர்ந்த 2 வாக்காளர்கள் உள்ளனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved