Also Watch
Read this
By: Manigandan Raja

முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதிபர் டிரம்ப்
கிரீன்லந்தில் அமெரிக்க ராணுவச் செயல்பாட்டை விரிவுபடுத்த அனுமதிக்கும் வகையில், அமெரிக்கா, கிரீன்லாந்து, டென்மார்க் இடையேயான முத்தரப்பு ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி கிரீன்லாந்தில் அதிக அளவில் அமெரிக்க ராணுவ வீரர்களை குவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே துப்பாக்கிச் சண்டை
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான் படைகள், பாகிஸ்தான் சோதனைச் சாவடிகள் மீது மோர்ட்டார் ரக குண்டுகள் மற்றும் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாகிஸ்தான் ராணுவமும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் வீட்டு விருந்தில் துப்பாக்கிச் சூடு
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகே உள்ள குவாமகுத்தா(KwaMakhutha) பகுதியில் நடைபெற்ற வீட்டு விருந்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 11 பேர் பலியாகினர். விருந்தினர்கள் ஒன்று கூடியிருந்தபோது, வீட்டிற்குள் நுழைந்த மூன்று மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் கர்ப்பிணி பெண் உட்பட 11 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved