Also Watch
Read this
By: Manigandan Raja

5 நாட்கள் வங்கி மூடப்படுவதால் பணிகள் பாதிக்கும் அபாயம்
நாடு முழுவதும் வரும் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது. இதனால், வரும் 26-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு தேசிய வங்கிகள் மூடப்படுவதால் பணிகள் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விநாயகர் ஊர்வலத்தில் அதிக சத்தத்துடன் இசைக்கப்பட்ட DJ
உத்தரப் பிரதேசத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அதிக சத்தத்துடன் இசைக்கப்பட்ட டிஜே-யால் 2-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

பலராம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ மாணவிகள் படித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக விநாயகர் ஊர்வலம் சென்றது.
மலைப்பாம்புடன் நடனம் - பெண் கைது
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வத்தில் மலைப்பாம்புடன் நடனமாடிய பெண் உட்பட அக்குழுவினரை கைது செய்த போலீசார் பாம்பை பறிமுதல் செய்தனர். வனவிலங்குகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved