news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

நாட்டை உலுக்கிய ஷாக் ரிப்போர்ட், தேர்தல் ஆணையத்தில் திடீர் பிளவு?

S.I.R. மூலம் மோசடி செய்தாரா ஞானேஷ்?

33

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

S.I.R. குறித்து தேர்தல் ஆணையர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி அறிக்கை, இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையரின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு மற்ற இரு அதிகாரிகளும் எழுத்துப் பூர்வமாக எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஞானேஷ்குமாரை பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

ஜனநாயக கவலை...
S.I.R மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு மிகப்பெரிய சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட்டதாக பாஜகவினர் ஒருபுறம் சிலாய்கித்து பேசி வரும் நிலையில், அதன்மறுபக்கம் வெளியாகி மறுதேர்தலையே கோரும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருப்பது ஜனநாயகவாதிகளை கவலையடையச் செய்திருக்கிறது.

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது. தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பொறுப்பேற்ற பின்பே இந்த நடைமுறை தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக பீகாரில் S.I.R பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் ஒரே அடியாக நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. உரிய அவகாசம் தராதது, புலம்பெயர்ந்தவர்களை அடையாளம் காணாதது, பாமர மக்களிடம் இந்திய குடிமகன் என்பதற்கான ஆதாரம் கேட்டது என பல குளறுபடிகளுடன் S.I.R Special Intensive Revision பணிகள் முடிந்ததாக உச்சநீதிமன்றம் வரை வழக்கு சென்றது.

12 மாநிலங்களில்...
சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் முதற்கட்ட S.I.R பணிகளும், அதைத்தொடர்ந்து பீகார் சட்டப்பேரவை தேர்தலும் நடந்து முடிந்து பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம், உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு 5 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து...
ஆளும் பாஜகவிற்கு சாதகமாக செயல்பட்டு, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த வாக்காளர்களையும், சிறுபான்மையினரையும் தேர்தல் ஆணையம் குறிவைத்து நீக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் பீகாரைப் போலவே, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.

தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு
இந்நிலையில் தான், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகிய இருவரும் கடந்த 10 மாதங்களில் SIR தொடர்பான முடிவுகள் குறித்து, குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக தங்களது எதிர்ப்பை தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்களை சேர்ப்பது, வாக்காளர் பெயர்களை நீக்குவது, வாக்காளர் பட்டியல் மென்பொருள் மற்றும் மேல்முறையீடுகள் உள்ளிட்ட விவகாரங்களில் இந்த எதிர்ப்பு இருந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.


செயல்பாட்டை பாதிக்கும்...
குறிப்பாக, புதிய வாக்காளர்கள் பதிவு செய்யும் Form 6ல் SIR தொடர்பான கூடுதல் விவரங்கள் சேர்க்கப்பட்டதற்கு இரு தேர்தல் ஆணையர்களும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதற்கு விதிகளில் திருத்தம் தேவை என அவர்கள் குறிப்பிட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும், வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல் தொழில்நுட்ப அமைப்பின் கட்டுப்பாட்டை டெல்லியில் வைத்திருப்பது குறித்தும் இரு தேர்தல் ஆணையர்களும் கவலை தெரிவித்ததாகவும், இது மாநில அளவிலான அதிகாரிகளின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும் எனவும் அவர்கள் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரத்து, கைது, கோரிக்கை...
ஏற்கெனவே S.I.R பணிகளால் தான் ஆட்சியை இழந்ததாக திரிணாமுல் காங்கிரசும் திமுகவும் கடுப்பில் ஆழ்ந்திருந்த நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆர்டிகள் அவர்களை உஷ்ணமாக்கியிருக்கிறது. கேரளாவில் ஆட்சியை பிடித்தாலும் பீகாரில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ், சமாஜ்வாடி உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்தியுள்ளன. மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே S.I.R பணிகளுக்கு பின் நடைபெற்ற தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்துவிட்டு வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என கோரியுள்ளார். அதோடு ஞானேஷை கைது செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தண்டிக்கப்பட வேண்டும்...
S.I.R பணிகளை இத்தோடு நிறுத்திவிட்டு, ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்க கோரியிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடந்த அனைத்தும் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டு இதற்குப் பொறுப்பானர்வர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Link
ஞானேஷ்குமார் பதவி விலகுக, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஞானேஷ்குமார் பதவி விலகுக, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி வழக்கில் காங். தலைவரின் பரபரப்பு வாக்குமூலம்

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved