news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

கடலூரில் கொந்தளித்த மேயர், குண்டுக்கட்டாக அரெஸ்ட்

நான் யார் தெரியுமா? ஒருமையில் எகிறிய திமுகவினர்

37

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடலூர் மாநகராட்சி ஆணையர் தங்களை ஒருமையில் பேசி வெளியே அனுப்பியதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறி தர்ணாவில் ஈடுபட்ட திமுகனரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். நான் யார் தெரியுமா? திமுககாரன் என அக்கட்சியின் மாநகர செயலாளர் ஒருபக்கம் ஒருமையில் பேசி எகிற, சரியாக பணி செய்ய தெரியாதவர் எல்லாம் ஆணையரா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே அவர்தான் ஐஏஎஸ் என்ற நினைப்பா? என மேயரும் ஆவேசமாக கொந்தளித்தார்.

கடலூர் மாநகராட்சியில்...
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதியின்கீழ், கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், முதுநகர் பக்தவத்சலம் மார்கெட் கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனிடையே, சுத்துக்குளம் பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் மேயரின் கவனத்திற்கு செல்லாமலேயே நடந்ததாக தெரிகிறது. இதனால், அங்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்ட திமுகவை சேர்ந்த மாநகராட்சி மேயர் சுந்தரி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பினார். மேலும், தூர்வாரும் பணியின்போது அகற்றப்பட்ட ஆகாயத்தாமரை மற்றும் சேறு-சகதி மீண்டும் வடிகாலுக்குள்ளேயே செல்லும் நிலையில் கொட்டிக்கிடப்பதாகவும் கூறினார். ஆனால், அதற்கு அதிகாரிகள் தரப்பில் இருந்து முறையாக பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

மாநகராட்சி மேயர்...
இதுகுறித்து கேட்பதற்காக மேயர் சுந்தரி, அவரது கணவரும் மாநகர திமுக செயலாளருமான ராஜா, திமுக மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்றனர். அப்போது, மாநகராட்சி ஆணையர் கிஷன் குமார் மாநகர திமுக செயலாளரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அலுவலகத்தின் முன்பே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஒருமையில் பேசி...
அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றனர். அப்போது, மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் ஆணையருக்கு மனிதர்களை மதிக்க தெரியாதா? மக்கள் பிரதிநிதிகளை மதிக்காத ஒருவர் ஆணையரா? தங்களை வெளியே போகச் சொல்வதற்கு ஆணையர் யார்? அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? ஐஏஎஸ் படித்திருந்தால் தங்களை மரியாதை குறைவாக பேசலாமா? ஐஏஎஸ் என்ற அதிகாரத்தை காட்டுகிறாரா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். இதனிடையே, மாநகர திமுக செயலாளர் ராஜாவும் ஆணையரை ஒருமையில் அவமரியாதையாக பேசினார்.

திமுக செயலாளர் vs ஆணையர்
அவர்களை ஒருவழியாக அமைதிப்படுத்தி ஆணையரிடம் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையினர். அப்போதும், திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட, நான் யார் தெரியுமா? திமுககாரன் எனவும் இது உங்கள் அப்பா வீட்டு அலுவலகம் கிடையாது எனவும்கூறி ஒருமையில் எகிறினார் மேயரின் கணவர் ராஜா. இதனால், டென்ஷன் ஆன ஆணையர் மரியாதைக்குறைவாக பேசக்கூடாது என ஆவேசமாக கத்தினார்.

குண்டுக்கட்டாக...
இதனை தொடர்ந்து அங்கிருந்து வெளியே வந்த திமுகவினர், தங்களிடம் ஆணையர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் எனக்கூறி சாலையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கலைந்து செல்லாதாதால் காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்றனர்.

கொந்தளித்த மேயர்
இதுகுறித்து பேசிய மேயர் சுந்தரி, ஆணையர் தனக்கு உரிய மரியாதையை கொடுப்பதில்லை எனவும் கமிஷனருக்கான வேலை என்னவென தெரியாத அவர் அந்த பொறுப்பிலேயே இருக்க கூடாது எனவும் கூறினார்.

மேலும், கிஷன் குமாருக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே கலெக்டர் என்ற நினைப்பு எனக்கூறிய மேயர், அவர் ஐஏஎஸ் படித்து பட்டம் பெற்றிருந்தால் அதனை நாங்கள் வாங்க போகிறோமா? மேயருக்கு கீழ்தான் ஆணையர் என்றுகூட தெரியாதா? எதுவாக இருந்தாலும் தன்னிடம் சொல்ல வேண்டும் என்பதுகூட சொல்லியா தெரிய வேண்டும் எனவும் கொந்தளித்தார். இதனை தொடர்ந்து, காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லாவை நேரில் சந்தித்து மனுவும் கொடுத்துள்ளார் மேயர்.

Related Link
VOC மார்க்கெட்டில் ரூ.35 கோடி ஊழல், லஞ்ச வீடியோ லீக், அதிர்ச்சியில் அதிகாரிகள்

VOC மார்க்கெட்டில் ரூ.35 கோடி ஊழல், லஞ்ச வீடியோ லீக், அதிர்ச்சியில் அதிகாரிகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாட்டை உலுக்கிய ஷாக் ரிப்போர்ட், தேர்தல் ஆணையத்தில் திடீர் பிளவு?

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved