Also Watch
Read this
ஜெம் வீரமணி விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறப்படும் புகாருக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கட்டப்பஞ்சாயத்தா?
இதுதொடர்பாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் கூறியதாவது;
சாந்தி யார் என்றே எனக்கு தெரியாது, காங்கிரஸ் SC பிாிவு மாநிலத்தலைவா் ரஞ்சன்குமார் உடன் மட்டுமே பழக்கம். வீரமணியை மிரட்டி பணம் வாங்கி தருமாறு ரஞ்சன்குமார் என்னை அணுகினார்

அசிங்கமான விஷயத்தில்...
வீரமணியை மிரட்டி பணம் பறிக்கத்தான் சாந்தி திட்டமிட்டு வீடியோ எடுத்துள்ளாா்.

வீரமணி விவகாரத்தில் மிரட்டி பணம் வாங்கித் தருமாறு, ரஞ்சன் குமார் என்னை அணுகினார். இப்படியொரு அசிங்கமான விசயத்தில் தலையிட மறுத்துவிட்டு நான் அங்கிருந்து சென்றுவிட்டேன்.

சாந்தியை மிரட்டவில்லை
எந்த காரணத்திற்காகவும், சாந்தியை நான் மிரட்டவில்லை. நான் மிரட்டினேன் என்றால், காவல்துறையிடம் புகார் தெரிவித்து இருக்கலாமே?

என்னை ஏன் சந்திக்க வந்தார். இதுதொடர்பாக, காவல்துறை விசாரித்தால், பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved