news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

சாந்தியை மிரட்டினாரா ஜான் பாண்டியன்? காங். நிர்வாகி ரஞ்சன் பகீர் ஆடியோ

வெடிக்கும் வீரமணி விவகாரம்

27

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் வீரமணி மற்றும் சாந்தி மீது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையெனவும், ஜான் பாண்டியன் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன், நியூஸ் தமிழ் நிருபரிடம் பேசிய ஆடியோ வெளியாகி உள்ள நிலையில், சாந்தியை தனக்கு யாரென்றே தெரியாது என்றும், கட்டப்பஞ்சாயத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லையெனவும் மறுத்துள்ள ஜான் பாண்டியன், தன்னை ஒரு அரசியல் தலைவர் மூலம்தான் ரஞ்சன் சந்திக்க வந்ததாகவும், தைரியம் இருந்ததால் அந்த அரசியல் தலைவரின் பெயரை அவர் சொல்வரா? எனவும் சவால் விட்டுள்ளார்.

போக்சோ வழக்கில்...
ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வன்கொடுமை வழக்கு, நாளுக்கு நாள் தமிழகத்தையே பரபரப்பாக்கி உள்ளது. வீரமணி மற்றும் சாந்தி மீது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே வீடியோ ஆதாரத்துடன் காவல்துறை உயரதிகாரிளுக்கு புகார் அளித்து விட்டதாக நியூஸ் தமிழ் செய்தியாளரிடம் காங்கிரஸ் மாநில நிர்வாகி ரஞ்சன் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.

அதில், பணத்தகராறில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தன்னை மிரட்டுவதாக கூறி, சாந்தி தன்னிடம் உதவி கேட்டதாக கூறிய ரஞ்சன், பண விவகாரம் குறித்து பேசுவதற்காக இருவரையும் சந்திக்க வைத்ததாக தெரிவித்தார்.

ரஞ்சன் பரபரப்பு புகார்
அந்த சந்திப்பின்போதுதான் வீரமணிக்கும் சாந்திக்கும் இருந்த தகாத உறவு குறித்தே தனக்கு தெரிந்ததாக கூறிய ரஞ்சன், சாந்தி மூலமாக தான் தனக்கு வீரமணியின் ஆபாச வீடியோக்கள் கிடைத்ததாகவும், அப்போதைய கூடுதல் ஆணையர் கண்ணனிடம் புகார் கொடுத்ததோடு, இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தன்னை நேரில் சந்தித்ததாகவும், 2 மாதங்களுக்குமேல் நாட்களை இழுத்துக் கடத்தி புகாரையே எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

ரூ.20 கோடி பேரம்
2024ல் தனது புகாரை கருத்தில்கொள்ளாத காவல்துறை 2025ல் பென்டிரைவ் வந்ததாக கூறுவது ஏன்? என ரஞ்சன் ஒருபுறம் கேள்வி எழுப்பும் நிலையில் சாந்தியை தனக்கு யாரென்றே தெரியாது என ஜான் பாண்டியன் தனது தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார்.

தொழிலதிபர் என்ற முறையில்தான் வீரமணியை தெரியுமே தவிர அவரது தனிப்பட்ட விஷயங்களை பற்றி எதுவுமே தெரியாது எனக்கூறிய அவர், வீரமணியை மிரட்டி 20 கோடி ரூபாய் வாங்கி தருமாறு தன்னை நேரில் வந்து சாந்தியும், ரஞ்சனும்தான் சந்தித்தாக தெரிவித்துள்ளார்.

ஜான்பாண்டியன் சவால்
தனது பெயரை கெடுப்பதற்காக புதிய தமிழகம் கட்சியும் யூடியூபர்கள் மூலம் அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டிய ஜான் பாண்டியன், ஒரு அரசியல் தலைவர் மூலமாகதான் ரஞ்சனே தன்னிடம் பேசியதாகவும், அந்த அரசியல் தலைவர் பெயரை அவர் சொல்ல தயாரா? எனவும் சவால் விடுத்தார்.

ஏன் வர வேண்டும்?
பணம் வாங்கி கொடுக்கும் வேலையெல்லாம் தான் செய்வது கிடையாது என அழுத்தமாக கூறியதால்தான் சாந்தியும், ரஞ்சனும் கிளம்பி சென்றதாக கூறிய ஜான் பாண்டியன், பணவிவகாரத்தில் சாந்தியை தான் மிரட்டியிருந்தால் போலீசில் புகார் அளிக்காமல் தன்னை ஏன் நேரில் சந்திக்க வர வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.

ஒத்துழைக்க தயார்
மொத்தத்தில் ரஞ்சன், சாந்தி ஆகிய இருவருக்குமே பணம் பறிப்பது ஒன்றே நோக்கம் எனக்கூறிய ஜான் பாண்டியன், வீரமணி விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனவும் காவல்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைக்க தயார் எனவும் கூறினார்.

விசாரணையில் தெரிய வரும்
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சன், ஜான் பாண்டியன் கூறுவதுபோன்று தன்மீது ஏதேனும் தவறு நிரூபிக்கப்பட்டால் தண்டனை அனுபவிக்க தயார் எனவும் வீரமணி விவகாரத்திற்கு பின்னால் நான் இருக்கிறேனா அல்லது ஜான் பாண்டியன் இருக்கிறாரா என்பது விசாரணையில் தெரியவரும் எனவும் கூறினார்.

Related Link
காவல்துறையில் அதிரடி இடி, மூடப்பட்ட வழக்கு விஸ்வரூபம்

காவல்துறையில் அதிரடி இடி, மூடப்பட்ட வழக்கு விஸ்வரூபம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"சிங்கப்பெண் படை எங்கே?" என உதயநிதி ஸ்டாலின் கேள்வி

36
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved