news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

ரூ.10.25 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி மியூசியம்

திறந்து வைத்தார் முதல்வா் விஜய்

35

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சுமார் 10.25 கோடி ரூபாயில், நவீன டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வா் விஜய் திறந்து வைத்தார்.

பழமை மாறாமல் டிஜிட்டல் ஃபோட்டோ, டிஜிட்டல் டிஸ்பிளே, தமிழ் மொழிபெயர்ப்பு வசதிகளுடன் அருங்காட்சியகம் புனரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.

நவீன தொழில்நுட்பத்தில்...
மதுரையில் அமைந்துள்ள காந்தி மியூசியத்தில், சுதந்திரப் போராட்ட வரலாறு, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் காந்தியின் தமிழக பயணம் ஆகியவற்றை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் போட்டோ, டிஜிட்டல் டிஸ்பிளே, தொடுதிரை தொழில்நுட்பங்கள் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு வசதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

பழமை மாறாமல்...
கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்ற இந்த சீரமைப்புப் பணிகளில், அதன் பழங்கால கட்டடக்கலை பாரம்பரியம் மற்றும் தரைதளங்கள் சிறிதும் சேதமடையாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மகாத்மாகாந்தியின் ரத்தம் தோய்ந்த ஆடை மற்றும் அவர் பயன்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள் ஆகியவை பொதுமக்கள் பார்வைக்காகச் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

திறப்பு விழாவில்...
மதுரைக்கு வருகை தந்த முதல்வர் விஜய், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், புனரமைக்கப்பட்ட புதிய காட்சியமைப்பு மற்றும் மகாத்மா காந்தியின் வரலாற்று ஆவணப்படத்தைக் கண்டு ரசித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Link
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில், யாரெல்லாம் பயனடையலாம்?

22
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved