news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில், யாரெல்லாம் பயனடையலாம்?

தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்

39

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தகுதி, கட்டுப்பாடுகள்...
மதுரையில், தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர்விஜய் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பயனடைவதற்கான தகுதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் என்னென்ன என்பது குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளன. ஆண், பெண் பாகுபாடின்றி எந்தெந்த குழந்தைகளுக்கு இந்த மோதிரம் கிடைக்கும், என்னென்ன சான்றிதழ் அவசியம் என்பது பற்றிய ஒரு விரிவான செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

தாய்மாமன் தங்க மோதிரம்
தமிழக அரசின், 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே 22 கேரட் தூய்மையிலான 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது என்பதும், தனியாரில் பிறந்து பின்னர் அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கும் இது வழங்கப்பட மாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாடு இல்லை...
இந்த திட்டத்தில் பயனடைவதற்கு ஆண், பெண் குழந்தை என்ற எந்தவொரு பாலின வேறுபாடும் கிடையாது. அதேபோல, பெற்றோரின் ஆண்டு வருமானத்திற்கும் எந்தவித வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. குடும்பத்தின் வருமானம் எதுவாக இருந்தாலும், அரசு மருத்துவமனையில் பிரசவம் மேற்கொள்ளும் அனைத்து தமிழகக் குடும்பங்களும் இதன் பலனைப் பெற முடியும். மேலும், முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை என குழந்தைகளின் எண்ணிக்கையிலும் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

தமிழகத்தை சேர்ந்தவராக...
இருப்பினும், இந்த திட்டத்தைப் பெறுவதற்குச் சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குழந்தையின் பெற்றோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதால் குடும்ப அட்டை, அடையாளச் சான்று அல்லது இருப்பிடச் சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியம். மேலும், கர்ப்பிணித் தாய்மார்கள் தமிழ்நாடு அரசின் 'பிக்மி' PICME- அமைப்பில் கண்டிப்பாக முன்பதிவு செய்து, RCH அடையாள எண்ணைப் பெற்றிருக்க வேண்டும். உயிருடன் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கு மட்டுமே இந்த மோதிரம் வழங்கப்படும் என்பதும் அரசின் வழிகாட்டுதலில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

தாய்மார்களின் உரிமை...
ஏழை, எளிய குடும்பங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் இந்த திட்டத்தைப் பெற, கர்ப்ப காலத்தில் அரசு அமைப்புகளில் முறையாகப் பதிவு செய்து, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து தாய்மார்கள் தங்களின் உரிமையை உறுதிசெய்து கொள்ளலாம்.

Related Link
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மலையேற்றத்தின்போது திடீர் பனிச்சரிவு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved