Also Watch
Read this
By: Manigandan Raja

சங்கத்தின் துணைத் தலைவர் கருணாஸ் திட்டவட்டம்
நடிகர் சங்க கட்டட பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், நடப்பாண்டு இறுதிக்குள் கட்டடத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் சங்கத்தின் துணைத் தலைவர் கருணாஸ் கூறினார்.
திறப்பு விழாவுக்கு, முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்தபோது வாய்மொழியாக அழைப்பு விடுத்ததாகவும், அவரும் கண்டிப்பாக வருவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், நடிகைகள் குறித்து அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விஜய் சேதுபதியின் "ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு" திரைப்படம்
விஜய் சேதுபதியின் “ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு” திரைப்படத்தின் சிறப்பு கதாபாத்திரத்திற்கான கிளிம்ப்ஸ் வீடியோ இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.

தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ள இந்த படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்க, தபு, சம்யுக்தா மேனன், துனியா விஜய், நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved