news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

தாராபுரம் இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு சவாலா? ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர்

களத்தில் தவெகவினர்...

28

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இடைத்தேர்தல்ல பெரிய வாக்கு வித்தியாசத்துல ஜெயிக்கணும்னு பொறுப்பாளர்களுக்கு முதல்வர் விஜய், ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆர்டர் போட்டிருக்காராம். இதுக்காக பல அதிரடிகளை ரெண்டு தொகுதிகள்லயும் தவெக செஞ்சுட்டு வருதாம். குறிப்பா தாராபுரத்துல தவெகவின் அரசியல் ஆக்சன் படு வேகத்துல இருக்காம்.

தாராபுரத்துல அதிமுகவுக்கு சாதகமா அலை வீசுதுன்னு செய்திகள் அலையடிக்கத் துவங்க, தவெக இந்தத் தொகுதியில இறங்கி வேலை செய்யுதாம். குறிப்பா, அதிமுக முன்னாள் எம்.பி.யாவும், எம்.எல்.ஏ.வாவும் இருந்த மடத்துக்குளம் மகேந்திரன் தவெகவுல சேர்ந்திருக்காரு,

இவருதான் தாராபுரம் தொகுதிய உள்ளடக்குன மாவட்டத்துக்கு அதிமுக மாவட்ட செயலாளர். இவரு தவெகவுல சேர்ந்த ஒரு மணி நேரத்துல இவருக்காகவே மடத்துக்குளம் தொகுதியை மட்டுமே உள்ளடக்குன திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத்தை புதுசா உருவாக்கி மாவட்ட செயலாளரா அறிவிக்கப்பட்டிருக்காரு.

முக்கியமா சத்யபாமாவுக்கு தொகுதியில அதிமுககாரங்க எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டிருக்க, மகேந்திரனே தவெகவுல சேர்ந்துட்டதால இனி அந்த எதிர்ப்பு இருக்காதுங்கறாங்க.

இன்னொரு பக்கம் செங்கோட்டையன் குடும்பத்துக்கு சம்பந்தியாவும் இருக்கற மகேந்திரன், எஸ்.பி.வேலுமணியோட வலது கரமாவும் இருந்திருக்காரு. இப்போ ரெண்டு பேரும் அதிமுகவுல இல்லாததால, அங்க தனக்கு பெரிய எதிர்காலம் இல்லைங்கறதால தவெகவுல இணைஞ்சிருக்காராம்.

சொல்லப்போன கடந்த முறை அதிமுக சார்பா நின்ன சத்யபாமா ஜெயிக்க கிரவுண்ட் லெவல்ல பக்காவா வேலை பார்த்ததே மகேந்திரன் தானாம். இப்போ அதே சத்யபாமாவை பெரிய வாக்கு வித்தியாசத்துல தவெகவுக்காக ஜெயிக்க வெச்சுக் காட்டுறேன்னு தவெகவுக்கு வந்திருக்காரு மகேந்திரன்.

Related Link
தாராபுரம் தேர்தல் களத்தில் தவெக மாஸ் ஷோ, சீறிப்பாய்ந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தாராபுரம் தேர்தல் களத்தில் தவெக மாஸ் ஷோ, சீறிப்பாய்ந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாராபுரம் இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு சவாலா? ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர்

27
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved