Also Watch
Read this
முதல்வர் விஜய் அமைச்சர்களுக்கான ஒரு பிரத்யேகமான உளவுத்துறைய உருவாக்கியிருக்காறாம். இதன் மூலமாத்தான் கட்சியிலயும், ஆட்சியிலயும் நடக்குற விவகாரங்களை தெரிஞ்சுக்கிட்டு, தப்பு இருந்துச்சுன்னா நடவடிக்கைக்கு உத்தரவிடுறதா சொல்றாங்க.

ஆட்சி மேலிடத்துல அமைச்சர்கள் மட்டத்துல அதிகார வர்க்கம் ரெண்டா பிரிஞ்சிருக்காம். விஜய் ரசிகர் மன்றத்துல இருந்து அமைச்சர்களாவும் அதிகார மையமாவும் ஒரு பிரிவு இருந்துக்கிட்டிருக்க, இன்னொரு பக்கம், மத்த கட்சியில இருந்து இப்போ சி.எம்.முக்கு பக்கத்துலேயே இருக்கற ஒரு பவர் சென்டர் ஒரு தனிப் பிரிவா இருக்காம்.

இந்த ரெண்டு கோஷ்டியும் ஒருத்தர் மேல ஒருத்தர் முதல்வர்கிட்ட ஆட்சி அமைஞ்ச நாள்ல இருந்து தொடர்ந்து புகார் சொல்லிட்டு வர்றாங்களாம். சமீபத்துல பருவ மழைக்கான முன்னேற்பாடுகளுக்காக பல கோடிகளுக்கு ஒரு டெண்டர் விடப்பட்டுச்சாம். இதுல ஒரு குறிப்பிட்ட அமைச்சர் சிண்டிகேட் போட்டு வேண்டப்பட்டவங்களுக்கு வாங்கிக் கொடுத்துட்டாருன்னு ஒரு க்ரூப் முதல்வர்கிட்ட பத்த வெச்சதாம்.

இன்னொரு பக்கம் ஐபிஎஸ் அதிகாரிகளை ஒரு குரூப் ரெகமண்ட் செஞ்சு பெரிய பதவிகள்ள உட்கார வெச்சுதாம். ஆனா அந்த அதிகாரிங்களை இப்போ ஆட்சி மேலிடம் மொத்தமாவே ஓரம்கட்டியிருக்கு. இதுக்கு காரணம் எதிர் குரூப் போட்டுக் கொடுத்ததுதானாம்.

ஆனா இதையெல்லாமே முதல்வர் சாதாரணமா உள்வாங்கிக்கிட்டு ரியாக்சன் காட்டாம வெளியில நடக்குற விவகாரங்களைப் பத்தி தெரிஞ்சுக்குறாராம். ரெண்டு குரூப் சொல்ற புகார்கள அதிகாரிகள் மூலம் க்ராஸ் செக் செஞ்சி நடவடிக்கை எடுக்குறாராம் முதல்வர்.

இதனால அமைச்சர்கள் மட்டத்துல அதிகாரத்துல இருக்கற பாலிடிக்ஸும், மாவட்ட அளவுல உட்கட்சி விவகாரங்களும் முதல்வர் கவனத்துக்கு தெரிய வந்துடுதாம்.

குறிப்பா, மதுரைய மையமா வெச்சு வெளியில இருந்து கட்சிக்கு வந்து அமைச்சராகி ஒட்டு மொத்த தென் மாவட்ட எம்.எல்.ஏ.க்களையும் ஆட்டிப் படைக்கறதும் முதல்வருக்கு போட்டுக் கொடுக்கப்பட்டிருக்காம். முதல்வரோட இந்த பிரத்யேகமான உளவுத்துறை தான் ஆட்சி மேல்மட்டத்துல பரபரப்பான பேசுபொருளாகியிருக்காம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved