news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

அமெரிக்காவின் எஃகு ஆலையை அமைக்கவுள்ள எஸ்ஸார் குழுமம்

மெசாபி மெட்டாலிக்ஸ்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
எஃகு ஆலை

15 பில்லியன் டாலரில் மிகப்பெரிய எஃகு ஆலை அமைக்க உள்ளது

இந்தியாவின் எஸ்ஸார் குழுமம், அமெரிக்காவின் அயோவா ((Iowa)) மாகாணத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான உலகின் மிகப்பெரிய எஃகு வளாகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் எஸ்ஸார் குழுமத்தின் துணை நிறுவனமான மெசாபி மெட்டாலிக்ஸ் ((Mesabi Metallics)) உயர் அதிகாரிகளுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் இத்திட்டத்தை அறிவித்தார்.

இந்த முதலீடு அமெரிக்க உற்பத்தித் துறைக்கு ஒரு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்ற டிரம்ப், இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய எஃகு ஆலையாக அமையும் என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவும், ஈரானும் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை

7 மாதப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் புதிய முயற்சியில், அமெரிக்காவும், ஈரானும் மத்தியஸ்தர்களுடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தின . நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது ஈரான் முன்வைத்த திருத்தப்பட்ட 7 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பேச்சுவார்த்தை நகர்கிறது.

ஏற்கனவே இருமுறை போர்நிறுத்த ஒப்பந்தங்கள் எட்டப்பட்டு அவை நீடிக்காமல் உடனே முறிந்துபோன நிலையில் தற்போது ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அமெரிக்காவின் இறுதிப் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போரைத் தொடர தயாராக இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

வடகொரியாவின் வீரர்கள் ரஷ்யாவில் குவிப்பு - ஜெலன்ஸ்கி

வடகொரியாவின் வீரர்கள் ரஷ்யாவில் குவிக்கப்பட உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் வடகொரியாவின் 8 ஆயிரம் வீரர்கள் தங்கி போர் பயிற்சிகளில் பங்கேற்கும் சூழலில் மீண்டும் பத்தாயிரம் வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி கூறினார்.

அந்த வீரர்களை தேர்வு செய்து போர் பயிற்சி கொடுக்கும் பணி நடைபெறுவதாகவும், அவர் தெரிவித்தார்.

Related Link
ஆசிய விளையாட்டு போட்டி : ஓட்டப்பந்தயம்,ஈட்டி எறிதல்,கிரிக்கெட்

ஆசிய விளையாட்டு போட்டி : ஓட்டப்பந்தயம்,ஈட்டி எறிதல்,கிரிக்கெட்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved