Also Watch
Read this
By: Manigandan Raja

1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் இந்திய வீரர் குல்வீர் சிங் வெள்ளி பதக்கம் வென்று அசத்தல்
ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவின் குல்வீர் சிங் சாதனை படைத்துள்ளார். குல்வீர் சிங் 3 நிமிடங்கள் 36 புள்ளி 72 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். இவர், ஏற்கெனவே 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் வெள்ளி பதக்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் 2வது வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
ஈட்டி எறிதல் பிரிவு
வெள்ளி, வெண்கல பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் யஷ்வீர் சிங் வெள்ளி பதக்கமும், ரோகித் யாதவ் வெண்கல பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். யஷ்வீர் சிங் 85.72 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.

ரோகித் யாதவ் 84.35 மீட்டர் தூரம் எறிந்தார். அதேபோல, ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீசங்கர்முரளி 8.07 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
5,000 மீட்டர் ஓட்டப்பந்தயம் இந்தியாவின் பருல் சவுத்ரி வெண்கல பதக்கம் வென்று அசத்தல்
ஆசிய விளையாட்டு 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் இந்தியாவின் பருல் சவுத்ரி வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த போட்டியில் பருல் சவுத்ரி 15 நிமிடம் 14 புள்ளி 61 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.

இவர், ஏற்கனவே பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியிலும் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.
ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டி
ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் காலிறுதிப் போட்டியில் விளையாடாமலேயே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நேற்று நடைபெறவிருந்த காலிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்வதாக இருந்தது.

ஆனால், மழை காரணமாக இந்த போட்டி டாஸ் சுண்டப்படாமலேயே கைவிடப்பட்டது. எனவே, ஐசிசி தரவரிசை அடிப்படையில் இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved