Also Watch
Read this
By: Manigandan Raja

ஒரே நாளில் மட்டும் 6 சதங்கள் விளாசி வீரர்கள் புதிய வரலாறு
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் 6 சதங்கள் விளாசப்பட்டு தனித்துவமான வரலாறு உருவாகியுள்ளது. இந்தியா - மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா, இங்கிலாந்து - இலங்கை இடையேயான ஒருநாள் போட்டிகளில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் சுப்மன் கில், விராட் கோலி, மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ், தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டேவிட் மில்லர், இங்கிலாந்து வீரர் டாம் பாண்டன் ஆகியோர் சதம் விளாசினர்.
2027 மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி
மகளிர் பிரீமியர் லீக் போட்டியில், 13 வீராங்கனைகளை ஆர்சிபி அணி தக்கவைத்துள்ளது. 2027-ல் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் அக்டோபர் 28-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஏலத்துக்கு முன்பாக அணிகள் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை தக்கவைத்தும், விடுவித்தும் வருகின்றன.

அந்த வகையில், ஆர்சிபி அணியில் 13 வீராங்கனைகள் தக்கவைக்கப்பட்டு, 4 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved