Also Watch
Read this

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் வித்யா ராம்ராஜ் 54.75 விநாடிகளில் இலக்கை கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

பி.டி.உஷாவின் சாதனையை...
இதன் மூலம், 1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இந்திய தடகள ஜாம்பவான் பி.டி.உஷா, 55.42 விநாடிகளில், படைத்திருந்த 42 ஆண்டுகால தேசிய சாதனையை வித்யா முறியடித்து உள்ளார். மேலும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் இலக்கை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

2ஆவது பதக்கம்
இந்த போட்டியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மரியம் கரீம், 54.31 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தையும், கஜகஸ்தானின் அடெலினா ஜெம்ஸ் 54.58 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

டப்பு ஆசிய விளையாட்டுத் தொடரில், வித்யா ராம்ராஜ் வெல்லும் 2ஆவது பதக்கம் இது. இதற்கு முன்பு கலப்பு 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் வித்யா இடம் பெற்றிருந்தார்.

ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை
ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலப்பதக்கம் வென்ற நிலையில், முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமைச் சேர்த்த வித்யா ராம்ராஜ்க்கு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் விஜய்,

வீராங்கனை வித்யா ராம்ராஜ்க்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved