Also Watch
Read this

ஆசிய விளையாட்டின் தடகளப் போட்டியில், இந்தியாவின் வீரர் குல்வீர் சிங், 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 1,500 மீட்டரை 2 நிமிடம் 36.72 விநாடிகளில் கடந்து, குல்வீர்சிங் 2வது இடத்தை பிடித்தார்.

2ஆவது இடத்தில்...
1,500 மீட்டர் பந்தயம் கொண்ட போட்டியை குல்வீர்சிங் 3 நிமிடம் 36.72 விநாடிகளில் கடந்து, தனது சிறந்த தனிப்பட்ட சாதனையை பதிவு செய்து 2ஆவது இடத்தைப் பிடித்தார். ஜப்பானின் கசுடோ இசாவா Kazuto Iizawa 3:36.35 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

இரட்டை வெள்ளி சாதனை
இதற்கு முன்னதாக, இதே ஆசிய விளையாட்டுத் தொடரில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார்.

வரலாற்று சாதனை
ஒரே ஆசிய விளையாட்டுத் தொடரில் இரு தனிநபர் தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்று இந்திய தடகள வரலாற்றில் குல்வீர் சிங் ஒரு புதிய தடம் பதித்து உள்ளார்.இந்திய ராணுவத்தில் நாயப் சுபேதாராக பணியாற்றி வரும் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான குல்வீர் சிங்கின் இந்த அசாத்திய திறமையும் விடாமுயற்சியும் இந்திய விளையாட்டுத் துறைக்கு பெரும் பெருமை சேர்த்துள்ளது. அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved