news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

கடத்த முயற்சியா? கவிழ்க்க சதியா? பிளைதுபாய் விமானத்தில் நடந்தது என்ன?

பதறியடித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பதறியடித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

துபாயில் இருந்து இஸ்ரேல் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென திட்டமிட்ட பாதையிலிருந்து தவறி வேறு பாதையில் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் நெதன்யாகு அவசர அவசரமாக கூட்டத்தை கூட்டி மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிய நிலையில், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

ஒட்டுமொத்த உலகத்தையும்...
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென செங்குத்தாக கீழ் நோக்கி பறந்து ஒட்டுமொத்த உலக அரசியலையும் உற்றுநோக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் நோக்கி 'ஃப்ளைதுபாய்' (flydubai) என்ற விமானம் பறந்து கொண்டிருந்தது. நூற்றுக் கணக்கான பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், திடீரென விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து கூச்சல் சத்தம் கேட்டதாக தெரிகிறது. ஒட்டுமொத்த பயணிகளின் கண்களும் சில நிமிடங்களுக்கு அந்த அறையை நோக்கியே இருந்தது. அப்போதுதான், திடீரென விமானம் செங்குத்தாக கீழ் நோக்கி செல்ல துவங்கியது.

உயிரை கையில் பிடித்துக் கொண்டு...
பயணிகள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பீதியில் அலற, விமானத்தை சரியாக இயக்க முடியாமல் விமானி திணறிக் கொண்டிருந்தார். நிலைமை மோசமானதால் பயணிகளும் விமான பணியாளர்களும் விமானியின் அறையை திறந்து பார்த்தபோது இரு விமானிகள் சட்டையைப் பிடித்துக் கொண்டு தாக்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பணியாளர்களும் பயணிகளும் தலையிட்டு இருவரது சண்டையையும் விலக்கி விட்டுள்ளனர்.

விமானம் கடத்தல்?
திட்டமிடப்பட்ட பாதையில் விமானம் செல்லாமல் தவறாக செல்வதை ரேடார் மூலம் கண்காணித்த இஸ்ரேல் வான்வழி போக்குவரத்து அமைப்புக்கு, விமானம் கடத்தல் என்ற அச்சுறுத்தல் சிக்னல் கிடைத்தது. இந்த தகவல் தீயாய் பரவியதும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவசர கூட்டத்தை கூட்டி விமானத்தை மீட்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். நிச்சயம் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என நினைத்து, வான் படைகளை சவுதி நோக்கி அனுப்பினார்.

பாதுகாப்பாக தரையிறக்கம்
துபாய் விமானம் கடத்தப்பட்டதா? என உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கிக் கொண்டிருந்த வேளையில், நல்வாய்ப்பாக சம்மந்தப்பட்ட விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தினுள் இருந்த பயணிகள் அனைவரும் தாங்கள் மறுபிறவி எடுத்துள்ளதை போல் கைகளை தட்டி ஆரவாரம் செய்ததுடன் "Od Avinu Chai" (ஓட் அவினு சாய்) என்ற கடவுள் இன்னும் இருக்கிறார் என்ற பொருள் படும் பாரம்பரிய பாடலை பாடி மகிழ்ந்தனர்.

என்ன காரணம்?
இதனிடையே இது கடத்தல் சம்பவம் அல்ல என்றும், விமானத்தில் உள்ள பணியாளர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை என்றும் இஸ்ரேல் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதே சமயம் விமானத்தை தரையில் மோதி பயணிகளை கொல்வதற்கான பயங்கர சதி முறியடிக்கப்பட்டதாகவும், கத்திக்குத்து காயத்துடன் போராடிய இந்திய பைலட், ஓமன் நாட்டை சேர்ந்த துணை பைலட்டின் பயங்கர சதிச்செயலை முறியடித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விமானிகளுக்கு இடையே என்ன தகராறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறிய விமான நிறுவனம், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விளக்கமளித்துள்ளது.

Related Link
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் ரூ.66.50 உயர்வு

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் ரூ.66.50 உயர்வு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ" என பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பதிவு

20
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved