news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

”அந்த குழந்தையே நீங்கதான் சார்” - திமுகவை கிண்டலடித்த முதல்வர் விஜய்

’இனி தோல்விக்கு தான் நன்றி சொல்லணும்’

42

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து, தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தது போல, இனி ஒவ்வொரு தேர்தலிலும் திமுக தோல்விக்கு தான் நன்றி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் எனவும் கிண்டலடித்தார். தவெகவை தரம் தாழ்த்தி பேசுவது திமுகவிற்கு தான் எதிராக முடியும் எனவும் அவர்களது ஊழல் கணக்கு இனி எடுபடாது எனவும் முதலமைச்சர் விஜய் விமர்சனமும் செய்தார்.

தாராபுரத்தில் முதல்வர் விஜய்
இடைத்தேர்தலை எதிர்கொள்ள உள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சித்ராவுத்தன்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க கோவை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக வந்த முதலமைச்சருக்கு 83 கிலோ மீட்டர் தூரம் உள்ள வழிநெடுகிலும் பொதுமக்கள், தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் காத்திருந்து வரவேற்பு மழையை பொழிந்தனர்.

தவெகவில் செம்மலை
பிரச்சார திடலுக்கு முதலமைச்சர் விஜய் வந்த நிலையில் அவரது முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். துணை பொதுச்செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முதலமைச்சரை வரவேற்றனர். தொடர்ந்து, தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து மேடையில் பேசினார் முதலமைச்சர்.

மன்னராட்சி மனநிலை
’இன்னும் நாங்கள் தான் முதலமைச்சர், நமது குடும்பம்தான் அதிகாரத்தில் உள்ளது, நமக்குதான் அனைவரும் அடிமையாக இருக்க வேண்டும்,’ என சிலர் நினைப்பதுபோன்ற மன்னராட்சி மனநிலை தங்களுக்கு கிடையாது என திமுகவை சாடினார். எம்மதமும் நம்மதம் என சொல்லிவிட்டுதான் நாங்கள் அரசியலுக்கே வந்துள்ளதாக கூறிய முதலமைச்சர் விஜய், நமது கூட்டணியின் பெயர்கூட மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்றார்.

குறுநில மன்னர்களை...
ஒரு சில திமுக தலைவர்கள் மறதியில் உண்மையைப்போட்டு உடைப்பதாகவும், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களை தான் தேர்தலில் நிற்க வைத்து திமுக மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்களை தவெக தோற்கடித்துள்ளதாகவும் கூறினார்.

தோல்விக்கு நன்றி
”அந்த குழந்தையே நீங்க தான் சார்” என்ற சினிமா டயலாக்கைகூறி கொளத்தூரில் ஸ்டாலினின் தோல்வியை கிண்டலடித்த முதலமைச்சர்,
’இனி ஒவ்வொரு தேர்தலிலும் தோல்விக்கு திமுக நன்றி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்,’ என்றார்.

மக்கள் தீர்ப்புக்கு...
தங்களை தரம் தாழ்த்தி பேசுவது திமுகவினருக்குதான் எதிராக முடியும் என விமர்சனம் செய்த முதலமைச்சர் விஜய், இந்த இடைத்தேர்தலிலும் கடந்த தேர்தலைபோலவே மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கதான் போகிறீர்கள் என கிண்டலடித்தார்.

ஊழல் கணக்கு எடுபடாது...
மேலும், எம்.ஜிஆர், ஜெயலலிதா போன்று திமுகவை தில்லாக எதிர்ப்பது நான் மட்டும்தான் எனக்கூறிய முதலமைச்சர் விஜய், திமுகவின் ஊழல் கணக்கு இனி எடுபடாது என பேசினார்.

Related Link

"திமுகவின் கிளை கழகம் அதிமுக" என முதல்வர் விஜய் கடும் விமர்சனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழ் மண்ணின் பெருமை சிவாஜி கணேசன் என முதல்வர் விஜய் புகழாரம்

37
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved