பணிக்காலம் நிறைவு பெற்று நாடு திரும்பும் வங்கதேச தூதர் ரியாஸ் ஹமீதுல்லாவை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஹமீதுல்லா ஆற்றிய பங்களிப்பை ஜெய்சங்கர் பாராட்டினார். மேலும், அவரது எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
மேற்குவங்க நெடுஞ்சாலைகளை வலுப்படுத்த நிதி ஒதுக்கீடு
மேற்கு வங்கத்தின் பிர்பும் ((Birbhum )) மாவட்டத்தில் உள்ள இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளை வலுப்படுத்தவும், குறிப்பிட்ட சில பகுதிகளில் அவற்றை அகலப்படுத்தவும் 508 கோடியே 66 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
NH-14 மற்றும் NH-114 ஆகிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
உத்தவ், ராஜ் தாக்கரே பேரணி குறித்து பட்னவிஸ் விமர்சனம்
மும்பையில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே தலைமையில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நடைபெற்ற பேரணி குறித்து, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடே இந்தப் பேரணி என்றவர், இரு தலைவர்களையும் “கஜினிகள்” என்று விமர்சனம் செய்தார்.