news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

"செவிலியர் தான் தற்போதைய இரையா?" என தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

ஜனநாயக வில்லனின் குரலா?

38

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கண் துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். போராடிய செவிலியர்களை பெண் காவல் அதிகாரி ஒருவரே, “வேண்டாம், உங்க உயிர் முக்கியம்,“ என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா? என்றும் கொந்தளித்துள்ளார்.

வாக்குறுதிகளை பறக்கவிட்டு...
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
கண் துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள் தான் தற்போதைய இரையா? பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செவிலியர்கள் கைது
போராடும் செவிலியர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திட மனம் வராத துரோக த.வெ.க. அரசுக்கு, ஈவு இரக்கமின்றி அவர்களைக் கைது செய்ய மட்டும் எப்படி மனம் வந்ததோ? போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகரே குற்றம் சாட்டியிருக்கிறார். தொடர்ந்து, போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்ன சொல்ல போகிறார்கள்?
எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு, தேர்தல் வந்தபோது பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி, ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்தால் காவல்துறை நடவடிக்கை, முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதலமைச்சர் விஜயும், அவரது நிர்வாகத் திறனற்ற துக்ளக் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அதிமேதாவி அமைச்சர்களும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?

இதுதான் ஜனநாயகமா?
போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தங்களது போராட்டத்தை தொடர்ந்த செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக கைது செய்தது தான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’? இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா?

விளம்பரம் தேடுவாரா?
போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி, “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்,” என மிரட்டியது தான் ஜனநாயக வில்லனின் குரலா? என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்குவாரா? அல்லது, செவிலியர்களை மிரட்டி குண்டுக்கட்டாகக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை, “சிங்கப்பெண் in action,” என ரீல்ஸ் செய்து தனது virtual abuser மூலம் டிரெண்ட் செய்து விளம்பரம் தேடுவாரா?
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Related Link
ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் என உதயநிதி குற்றச்சாட்டு

ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் என உதயநிதி குற்றச்சாட்டு

            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹர்மன்ப்ரீத் கவுர் விலகல், உருக்கம்

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved