news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஹர்மன்ப்ரீத் கவுர் விலகல், உருக்கம்

இந்திய கிரிக்கெட் அணியுடனான பயணம் தொடரும்

33

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹர்மன்ப்ரீத் கவுர் விலகல், உருக்கம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹர்மன்ப்ரீத் கவுர் அறிவித்து உள்ளார். கேப்டன்ஸி முடிந்திருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியுடனான தனது பயணம் தொடர்வதாக ஹர்மன்ப்ரீத் கவுர் உருக்கம் தெரிவித்து உள்ளார்.

அறிவித்தார் கேப்டன்...
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
இன்று அக்டோபர் 6ஆம் தேதி, இந்த முக்கிய முடிவை, கவுர் வெளியிட்டு உள்ளார். ’கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், ஒரு வீராங்கனையாக இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன்,’ என்று தனது அறிவிப்பில் கவுர் விளக்கம் அளித்துள்ளார்.

வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர்
ஹர்மன்பிரீத் கவுரின் தலைமையின் கீழ், 2025ல் நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி, தனது முதல் உலகக் கோப்பை பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

ஆசிய விளையாட்டில் தங்கம்
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்திய அணியை வழிநடத்தி வந்த ஹர்மன்பிரீத் கவுர், அண்மையில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்திய அணிக்கு தங்கம் வென்று தந்தார்.

அடுத்த கேப்டன் யார்?
இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுனர்கள் அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக, அணியில் தலைமை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், தற்போதைய துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவை கேப்டனாக நியமிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.

அடுத்த கட்டத்திற்கு...
அடுத்தடுத்த முக்கியத் தொடர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக இந்திய மகளிர் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த தலைமை மாற்றம் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

Related Link
பழைய தங்கங்களைத் தக்கவைப்பதா? புதிய தங்கங்களை உருவாக்குவதா?

பழைய தங்கங்களைத் தக்கவைப்பதா? புதிய தங்கங்களை உருவாக்குவதா?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராகுல் காந்தி, பிரியங்கா, அகிலேஷ் கைது

38
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved