news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் கண்காணிப்பு

டிரம்ப்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி மறுத்த டிரம்ப்

  • அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல்களைக் கண்காணிக்க சர்வதேச அமைப்பான OSCE-க்கு அனுமதி மறுத்து டிரம்ப் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 1975-இல் இருந்து அமெரிக்கத் தேர்தல்களைக் கண்காணித்து வரும் இந்த அமைப்பு, 2002 முதல் அனைத்து பொதுத் தேர்தல்களையும் முழுமையாகக் கண்காணித்து வந்தது.
  • இந்நிலையில், சர்வதேச கண்காணிப்பாளர்களைத் தவிர்த்துள்ள டிரம்ப் நிர்வாகம், அதற்குப் பதிலாக அமெரிக்க நீதித்துறை மூலமாக சுமார் ஆயிரம் கூட்டாட்சி கண்காணிப்பாளர்களை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்த பாக். பிரச்சாரம்

  • தன்சானியாவில் (Tanzania) நடைபெற்ற IPU கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
  • ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும் என்று இந்தியா திட்டவட்டமாக வலியுறுத்தியது. பாகிஸ்தானின் எந்தவொரு தவறான பிரச்சாரத்தாலும் இந்த உண்மையை மாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

எல்லைப் பகுதியை திறக்க சீனாவை நாடும் நேபாளம்

  • நேபாளம் மற்றும் சீனா இடையேயான தட்டோபானி(Tatopani) எல்லையை மீண்டும் திறக்க நேபாள அரசு சீனாவின் ஒப்புதலை நாடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த எல்லைப் பகுதி வழியாக போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
  • இந்நிலையில், தட்டோபானி வழியாகப் போக்குவரத்துச் சேவைகளை மீண்டும் தொடங்கவும், ரசுவாகதி எல்லைப் பகுதியின் செயல்பாடுகளை மீட்டெடுக்கவும் நேபாளம் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


Related Link
அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி மீது சாதகமான கண்ணோட்டம்

அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி மீது சாதகமான கண்ணோட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசத்தும் Elevate Facelift

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved