news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

திமுகவின் பொய் பரப்புரை அம்பலம் என தவெக கடும் விமர்சனம்

Post-Settlement GST வருவாய் 16.1% உயர்வு

39

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஜிஎஸ்டி வசூல் 5 விழுக்காடு சரிவு, அரசின் நிர்வாகத் தோல்வி என்ற திமுகவினரின் பிரச்சாரம் பொய்யாகி உள்ளதாக தவெக பதிலடி தந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு உண்மையில் கிடைக்கும் Post-Settlement GST வருவாய் 16.1 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

உண்மை முகம்...
இதுதொடர்பாக, தவெக வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
“ஜிஎஸ்டி 5% சரிவு, தமிழக அரசின் நிர்வாகத் தோல்வி,” என்று கடந்த சில நாட்களாக திமுகவினரின் அரைவேக்காட்டு பிரச்சாரத்தின் உண்மை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Gross GSTஐ மட்டும் காட்டி, மக்களை ஏமாற்ற முயன்றவர்களை, அதிகாரப்பூர்வத் தரவு நறுக்கென்று குட்டியுள்ளது. தமிழ்நாட்டிற்கு உண்மையில் கிடைக்கும் Post-Settlement GST வருவாய் 16.1% உயர்ந்துள்ளது என தமிழ்நாடு நிதித்துறை செயலாளரே தெளிவுபடுத்தி உள்ளார்.

நோக்கம் அம்பலம்
அப்படியிருக்க, “5% குறைந்துவிட்டது” என்று மட்டும் கூறி பொருளாதாரம் வீழ்ச்சி, அரசு நிர்வாகத் தோல்வி என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூப்பாடு போடுபவர்களின் நோக்கம் அம்பலமாகியுள்ளது.

உண்மையை வெல்ல முடியாது...
உற்பத்தி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொருட்களை விநியோகிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், IGST Settlement உள்ளிட்ட பல்வேறு காரணிகள் Gross GST எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே, தமிழ்நாட்டின் உண்மையான GST வருவாய் நிலையை மதிப்பிடும்போது Post-Settlement GST தரவுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொய் பிரச்சாரத்தால் உண்மையை வெல்ல முடியாது.
இவ்வாறு தவெக தெரிவித்துள்ளது.

Related Link
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு? முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு? முதல்வர் எடுத்த அதிரடி முடிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"மக்களால் உருவாக்கப்பட்டவன் நான்" என CM விஜய் பாணியில் பேசிய SK

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved