news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

மெஸ்ஸி ஓய்வு: சர்வதேச கால்பந்தில் ஒரு சகாப்தத்தின் முடிவு

ரசிகர்களின் மனங்களில்...

43

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஒரு கால்பந்து வீரர் ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி, பொதுவாக விளையாட்டுச் செய்தியாக மட்டுமே இருக்கும். ஆனால், லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்தில் இருந்து விடைபெற்றுள்ளார் என்ற செய்தி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

காரணம், அது சர்வதேச கால்பந்து வரலாற்றில் ஒரு அத்தியாயத்தின் முடிவு. கால்பந்தில் எல்லாவற்றையும் வெல்ல முடியுமா? என்ற கேள்விக்கு, கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தனது கால்களால் பதில் சொன்ன ஒரு வீரருடைய சர்வதேச விளையாட்டுப் பயணத்தின் நிறைவு.

மேஜிக் மெஸ்ஸி: 21 ஆண்டுகள், 208 போட்டி, 126 கோல்
மெஸ்ஸியின் சர்வதேச கால்பந்து பயணம் 2005ல் தொடங்கியது. அப்போது அவர் ஒரு இளம் வீரர். அடுத்த 21 ஆண்டுகளில், அந்த இளைஞன் அர்ஜென்டினாவின் கேப்டனாகவும், நாட்டின் மிகப்பெரிய கால்பந்து அடையாளமாகவும் மாறினார். அர்ஜென்டினா அணிக்காக 208 போட்டிகள், 126 கோல்கள், 68 கோல் உதவிகள், 6 உலகக் கோப்பைகள், 7 கோபா அமெரிக்கா தொடர்கள் என ஒரு பிரமாண்டமான சர்வதேச பயணத்தை முடித்திருக்கிறார்.

அதிக போட்டிகளில்...
அர்ஜென்டினாவுக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் இவர்தான். அதிக கோல் அடித்த வீரரும் இவர்தான். மெஸ்ஸி 8 முறை Ballon d’Or எனப்படும் உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றுள்ளார். அதேபோல், உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த வீரருக்கான Golden Ball விருதை 2 முறை, 2014 மற்றும் 2022ல் பெற்றுள்ளார். ஆனால், இந்த எண்ணிக்கைகளைவிட முக்கியமானது, மெஸ்ஸியின் பயணம் எப்படித் தொடங்கியது என்பதுதான்.

ஆரம்பத்தில்...
இன்றைக்கு மெஸ்ஸி என்றாலே அர்ஜென்டினா மக்களுக்கு பெருமை. ஆனால், ஆரம்பத்தில் மெஸ்ஸியை அர்ஜென்டினா ஏற்றுக் கொள்ளவில்லை. மெஸ்ஸி சிறுவயதிலேயே அர்ஜென்டினாவை விட்டு ஸ்பெயினுக்குச் சென்றார். பார்சிலோனா அவரது கால்பந்து வாழ்க்கையை வளர்த்தது.

அதற்கும் மேலாக, அர்ஜென்டினாவில் கால்பந்து என்றால் மரடோனா. மரடோனாவுக்குப் பிறகு வந்த மிகப்பெரிய நட்சத்திரமாக மெஸ்ஸியைப் பார்த்தவர்கள், அவரை தொடர்ந்து மரடோனாவுடன் ஒப்பிட்டார்கள். மெஸ்ஸி எவ்வளவு சிறப்பாக விளையாடினாலும், “உலகக் கோப்பையை வென்றிருக்கிறாயா?”
என்ற கேள்வி அவரைத் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது.

2022: உலகமே மெஸ்ஸியை ஏற்றுக்கொண்ட தருணம்
மெஸ்ஸியின் சர்வதேச வாழ்க்கையின் ஒரு கட்டம் வெற்றிகளைவிட தோல்விகளால் நினைவுகூரப்பட்டது. 2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டி. ஜெர்மனியிடம் தோல்வி. 2015 கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் சிலி அணியிடம் தோல்வி. 2016 கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் மீண்டும் சிலியிடம் தோல்வி.

தொடர்ந்து இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்ததால், மெஸ்ஸி மீது விமர்சனங்கள் அதிகரித்தன. ஒரு கட்டத்தில் அவர் சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாகவே அறிவித்தார். ஆனால், மெஸ்ஸி திரும்பி வந்தார். 2021 கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

உலக சாம்பியன்
2022 கத்தார் உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் முதல் போட்டியிலேயே சவுதி அரேபியாவிடம் தோல்வி. ஆனால் அதன் பிறகு மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா முன்னேறியது. மெக்சிகோ, போலந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, குரோஷியா, இறுதியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது. மெஸ்ஸி உலக சாம்பியன் ஆனார்.

மரடோனாவுடன் ஒப்பிடப்பட்ட மெஸ்ஸி, தனது தலைமுறையின் மிகப்பெரிய பரிசை வென்றுவிட்டார். மெஸ்ஸியின் தலைமையில், 2021 கோபா அமெரிக்கா, 2022 உலகக் கோப்பை, 2024 கோபா அமெரிக்கா என மூன்று ஆண்டுகளில் மூன்று மிகப்பெரிய சர்வதேச கோப்பை. இதுதான் மெஸ்ஸியின் சர்வதேச வாழ்க்கையின் உண்மையான திருப்புமுனை.

ரசிகர்களை ’மெஸ்மரைஸ்’ செய்த மெஸ்ஸி
2012ல் ஒரே ஆண்டில் 91 கோல் அடித்தது இன்னும் அவரது மிகப்பெரிய தனிப்பட்ட சாதனைகளில் ஒன்றாக இருக்கிறது. பார்சிலோனா, PSG, இன்டர் மியாமி, அர்ஜென்டினா என எந்த அணிக்காக விளையாடினாலும், மெஸ்ஸியின் ஆட்டத்தில் ஒரு பொதுவான விஷயம் இருந்தது. பந்தை காலில் வைத்தவுடன், அடுத்து என்ன நடக்கும் என்று எதிரணிக்கே தெரியாது.

உலக வரலாற்றில்...
ஒரு Pass எதிர்பாராத இடத்துக்குச் செல்லும் அந்த தருணம், ஃப்ரீ-கிக் எடுக்க மெஸ்ஸி நிற்கும் காட்சி, கடைசி நிமிடத்தில் பந்தை காலில் வாங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்றும், கால்பந்து ரசிகர்களை தனது ஆட்டத்தின் மூலம் மெய்மறக்கச் செய்தவர். 39 வயது மெஸ்ஸி, 2026ல் இன்டர் மியாமிக்காக ஏற்கெனவே 100 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டியிருக்கிறார். மெஸ்ஸி இப்போது ஒரு வீரர் மட்டுமல்ல. அவர் ஒரு பிராண்ட். ஒரு தலைமுறையின் கால்பந்து நினைவு. மரடோனாவைப் போலவே உலக கால்பந்து வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம்.

விடை பெற்றார்...
2026 அக்டோபர் 6ஆம் தேதி, பியூனஸ் அயர்ஸில் உள்ள மாபெரும் Monumental மைதானத்தில், மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினுக்கு Benin எதிராக அர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்த ஆட்டத்தில் ஒரு கோலும், இரண்டு கோல் உதவிகளும் செய்து, வழக்கமான மெஸ்ஸியாகவே சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார். 85,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் நிறைந்திருந்த Monumental மைதானம் மெஸ்ஸிக்கு விடை கொடுத்தது.

ரசிகர்கள் கண்ணீர் விட்டனர். மெஸ்ஸியும் கண்ணீர் விட்டார். அவர் இனி கிளப் கால்பந்தில் தொடர்ந்து இன்டர் மியாமி அணிக்காக விளையாடுகிறார். அந்த அணியுடன் 2028 MLS சீசன் முடியும் வரை ஒப்பந்தம் உள்ளது.

ரசிகர்களின் மனங்களில்...
கோல்களால், பந்தை தன்னுடன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, எதிரணி வீரர்களைத் தாண்டிச் செல்லும் அவரது Dribbleகளால், உலகக் கோப்பையால் மட்டும் அல்ல. முடியாது என்று சொல்லப்பட்ட இடத்தில் மீண்டும் மீண்டும் முயன்று, இறுதியில் எல்லாவற்றையும் வென்ற வீரராக, கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் மெஸ்ஸி இருக்கிறார்.

Related Link
தமிழக வீரர்களுக்கான பாராட்டு விழாவில் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’

தமிழக வீரர்களுக்கான பாராட்டு விழாவில் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சீன ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்ட்ரீவா அபாரம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved