இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” திரைப்படத்தின் கதை முடிச்சு டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் நடிப்பில் கடந்த 25-ம் தேதி வெளியான இந்த படம் 1990-களில் மூன்றாம் பாலினத்தவராக மாற்றம் பெரும் இளைஞரின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள "BURIED" திரைப்படம்
நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள "BURIED" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், போலீஸ் விசாரணை தொடர்பான நாளிதழ்களின் செய்திகள் பின்னணியில் இடம்பெற்றுள்ளன. மேலும், பைக்கில் முகமூடி அணிந்தபடி பலர் உள்ளனர்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சமூக வலைதளங்களில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். வெப் படத்தை இயக்கிய ஹாரூன் இயக்கியுள்ள இந்த படத்தில், வெற்றி ஒரு என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள "ரணபாலி" திரைப்படம்
நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள "ரணபாலி" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கதாநாயகியாக ரஷ்மிகா நடித்துள்ளார். 1870-களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பஞ்சத்தை எதிர்த்து தட்டிக்கேட்ட நாயகனின் கதையை வெளிப்படுத்தும் இந்த படம், தசரா பண்டிகையை முன்னிட்டு வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.