Also Watch
Read this
இளைஞர்களை கைது செய்வதன் மூலம், டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை முதலமைச்சர் நிரூபித்துள்ளதாக உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை ஏற்க முடியாது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையர் விவகாரம்
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
’தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்,’ என்று சென்னை பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைது செய்துள்ள இந்த ஷோபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஒட்டு மொத்த நாடும், இவர்கள் கூட்டணி வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் சில கட்சிகளும் கூட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் போது, இந்த டம்மி முதலமைச்சர், யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார்.

அக்கறை கொண்ட இளைஞர்கள் கைது
சுய மரியாதையும், நாட்டின் மீதும் அக்கறையும் கொண்ட அறிவார்ந்த இளைஞர்களை கைது செய்வதன் மூலம், டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதலமைச்சர் நிரூபித்துள்ளார்.

ஏற்க முடியாது
கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை ஏற்கமுடியாது.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved