news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஆபாசப் பேச்சும், வன்ம அரசியலும் திமுகவை தூக்கியெறிந்த மக்கள்

திமுக படுதோல்விக்கு இதுதான் காரணமா?

37

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிகார பீடத்திலிருந்து எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்ட திமுக, தங்களது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க அத்தனை பலத்தையும் ஒன்று திரட்டி, இடைத்தேர்தலை எதிர்கொண்டது. இறுதியில் மக்களின் தீர்ப்பால் 2 தொகுதிகளிலும் திமுக தோல்வியையே சந்தித்திருக்கிறது. பிரசார மேடைகளில் திமுக தலைவர்கள் கக்கிய தரம் தாழ்ந்த, ஆபாசமான வன்ம பேச்சுக்கள் தான் அவர்களை இந்த அதள பாதாளத்தில் தள்ளியுள்ளதா?

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்...
கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஆட்சியை மீண்டும் பிடிப்போம் என மார்தட்டிய திமுகவிற்கு, இரண்டே ஆண்டுகளில் கட்சி ஆரம்பித்து அசுர வளர்ச்சி கண்ட தவெக மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. தனிப்பெரும் கட்சியாக வரத் துடித்த திமுகவோ, 59 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தள்ளப்பட்டது.

இந்த தோல்வியை தாங்கி கொள்ள முடியாத திமுக தரப்பு, விஜய்யின் சினிமா கவர்ச்சியால் மக்கள் ஏமாந்து விட்டதாகவும், தவெகவுக்கு வாக்களித்ததற்காக மக்கள் இப்போது வருந்துவதாகவும் ஏளனம் பேசி தங்களை தாங்களே ஆசுவாசப்படுத்தி கொண்டது.

கூட்டணி சிதறல்...
பல ஆண்டுகளாக, திமுக கூட்டணியின் தூண்களாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்டவை திமுகவின் ஆதிக்க போக்கையும், சமரசமற்ற அணுகுமுறையையும் தாங்க முடியாமல் கழன்று கொண்டு தவெகவை நோக்கி தாவின.

ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளில் திமுக வெறும் வாக்கு அரசியலை மட்டுமே செய்கிறது என்பதை உணர்ந்த கூட்டணி கட்சிகள் அணிமாறியது அக்கட்சியின் தலைமைக்கு பலத்தை அடியோடு தகர்த்ததுடன், தவெகவின் தலைமையில் புதிய சமூகநீதி வெற்றி கூட்டணி உருவாவதற்கும் வழிவகுத்தது.

உருவக்கேலி செய்த...
பெரியார் மண், சுயமரியாதை என்று முழங்கிவிட்டு, தவெக வேட்பாளர் சத்யபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்ததும், உதயநிதி பேசிய ஆபாச பேச்சு பெண்களையும் நடுநிலை வாக்காளர்களையும் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தஞ்சாவூரில் தொடங்கி தேர்தல் களம் வரை எதிரொலித்த இந்த தரம் தாழ்ந்த தனிநபர் தாக்குதல், திமுகவின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்ததுடன், ஒட்டுமொத்த பெண்களின் சாபத்தையும் பெற்று தந்ததாக கூறப்படுகிறது.

களத்தில் 2,500 பேர்...
தவெகவின் அசுர வளர்ச்சியை பார்த்து உள்ளுக்குள் ஆடிப்போன திமுக தலைமை, தங்கள் பலம் குறையவில்லை என்பதை நிரூபிக்க நடந்து முடிந்த 2 இடைத்தேர்தல்களிலும் அத்தனை பலத்தையும் களம் இறக்கியது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் மற்றும் இளைஞரணி என சுமார் 2 ஆயிரத்து 500 பேர் இரண்டு தொகுதிகளிலும் முகாமிட்டனர்.

துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஒவ்வொரு தொகுதியிலும் 5 இடங்களிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்களிலும், உதயநிதி ஸ்டாலின் 4 இடங்களிலும் சூறாவளிப் பிரச்சாரம் செய்தனர்.


வெற்றி, முதல்வர் விஜய் கருத்து
ஆனால், திமுக இத்தனை பேரை இறக்கி இருந்தாலும் தேர்தல் களமோ, வேறு ஒன்றை சொல்லி சென்றிருக்கிறது. முதலமைச்சர் விஜயின் அலை திமுகவின் அத்தனை வியூகங்களையும் அடித்து நொறுக்கி இருக்கிறது.

இடைத்தேர்தல் வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் விஜய், ’தவெகவின் இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜயின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி,’ எனக் கூறியுள்ளார்.

Related Link
இடைத்தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் வெற்றி என முதல்வர் பெருமிதம்

இடைத்தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் வெற்றி என முதல்வர் பெருமிதம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிரவைத்த இடைத்தேர்தல் தோல்வி இரட்டை இலை கோட்டையை தகர்த்த விசில் சத்தம்

39
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved