news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

சர்ச்சைகளை உடைத்தெறிந்த சத்யபாமா 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக

தாராபுரத்தில் தவெக தாறுமாறு வெற்றி

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுகவில் இருந்தபோது தாராபுரத்தில் வெற்றி பெற்ற சத்யபாமா, தவெகவிற்கு தாவியபின் எதிர்கொண்ட இடைத்தேர்தலிலும் தனது வெற்றியை பதிவு செய்துள்ளார். திமுக 2ஆவது இடத்தையும், அதிமுக 3ஆவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில், தவெகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், விசிலை ஊதியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம் சட்டப்பேரவை தொகுதியில்...
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் சத்யபாமா. ஆனால், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு சத்யபாமா உண்மையாக இல்லை எனவும் மீண்டும் இவரை நம்பி எப்படி வாக்களிப்பார்கள் எனவும் விமர்சனம் எழுந்தது.

ஆனாலும், தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளராக சத்யபாமா முன்னிறுத்தப்பட்டு, அவருக்காக பிரச்சாரம் செய்தார் முதலமைச்சர் விஜய். அப்போது, தன் மீது எதிர்க்கட்சிகள் அவதூறுகளை வாரி வீசுவதாக மேடையிலேயே உணர்ச்சிப்பெருக்கில் சத்யபாமா கண்ணீர் சிந்த, முதலமைச்சர் ஆறுதல் கூறி அவரை தேற்றினார்.

சர்ச்சைக்கு மத்தியில்...
இதனிடையே, இந்த உருவத்தை வைத்துக்கொண்டு சத்யபாமா எப்படி பல்டியடித்தார் என முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மேடையிலேயே பேச அதுவும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் தேர்தலுக்கு 31 கோடி ரூபாய் செலவு தொடர்பாக சத்யபாமா பேசியது போன்ற வீடியோ இடைத்தேர்தல் அன்று வெளியானது. இத்தனை சர்ச்சைக்கு மத்தியில்தான் சத்யபாமா தாராபுரத்தில் தனது வெற்றியை நிலைநாட்டி உள்ளார்.

வாக்கு எண்ணிக்கையில்...
திருப்பூர் எல்ஆர்ஜி மகளிர் கல்லூரியில் காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகித்தது. அடுத்து இவிஎம் மிஷினில் பதிவான வாக்குகளை எண்ணும்போது முதல் 2 சுற்றுகளில் தவெக முந்த, 3 மற்றும் 4ஆவது சுற்றில் அதிமுக முன்னிலை வகித்தது. தொடர்ந்து 5, 6, 7ஆவது சுற்றுகளில் தவெக தலைதூக்க, 8ஆவது சுற்றில் திமுக முந்தியது.

அடுத்து 9 முதல் 23 வரையிலும் யாருக்கும் இடத்தை விடாமல் தவெகவே தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. இறுதியில், தவெக வேட்பாளர் சத்யபாமா 9 ஆயிரத்து 471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் அதிமுக 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.


முதலிடத்தில் தவெக...
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தாராபுரத்தில் தவெக 46 ஆயிரத்து 438 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது சத்யபாமா 66 ஆயிரத்து 841 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யா 57 ஆயிரத்து 370 வாக்குகளும், அதிமுகவை சேர்ந்த பானுமதி 45 ஆயிரத்து 280 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கார்த்திகா 5 ஆயிரத்து 268 வாக்குகளும் வாங்கி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ப.லட்சுமணன் ஆயிரத்து 157 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார்.

இடைத்தேர்தலில் வெற்றியை தழுவி உள்ள தவெகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்கள் மற்றும் கடைகளில் இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விசிலை ஊதியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெற்றி மீது வெற்றி வந்து...
இதனிடையே தாராபுரம் தவெக வசமானது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி சிறப்பாக உள்ளது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த இடைத்தேர்தல் ரிசல்ட்தான் எனக்கூறியதோடு வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச்சேரும் என்ற பாடலையும் பாடி சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

இதனிடையே, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் வெற்றி மூலம் சட்டமன்றத்தில் தவெகவின் பலம் 109 ஆக ஆனதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Related Link
மீண்டும் அதே தொகுதியில் வெற்றி, நின்று களமாடிய மரகதம் குமரவேல்

மீண்டும் அதே தொகுதியில் வெற்றி, நின்று களமாடிய மரகதம் குமரவேல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபாசப் பேச்சும், வன்ம அரசியலும் திமுகவை தூக்கியெறிந்த மக்கள்

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved