news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மீண்டும் அதே தொகுதியில் வெற்றி, நின்று களமாடிய மரகதம் குமரவேல்
tv

Also Watch

மீண்டும் அதே தொகுதியில் வெற்றி, நின்று களமாடிய மரகதம் குமரவேல்

தவெக தொண்டர்கள் செம ஹேப்பி

37

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், இடைத்தேர்தலிலும் அதே தொகுதிலேயே தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றியை எட்டிப் பிடித்துள்ளார். திமுக வேட்பாளர் பரந்தாமனை 2ஆவது இடத்திற்கும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை 3ஆவது இடத்திற்கும் தள்ளிவிட்ட தவெகவினர், அதனை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

பேராதரவு தந்த மக்கள்
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். பதவியை தூக்கி எறிவது மக்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் இல்லையா? தனது சுயலாபத்திற்காக மக்களை பகடைக்காயாக மாற்றுவதா? என பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால், அத்தனையையும் தாண்டி தற்போது அதே மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக களமிறங்கிய மரகதம் குமரவேலுக்கு மக்கள் முன்பைவிட பேராதரவையே வழங்கினர்.

ஆரம்பத்தில் அதிமுக
9ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. அதில், திமுகவே முன்னிலை வகித்தது. அடுத்து, காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், தொடக்கத்திலேயே அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் அதிரிபுதிரி வேகத்தில் முன்னிலையில் வந்தார். மதுராந்தகம் ஏற்கெனவே தங்களின் கோட்டை, அதனை புதிதாக எந்த கட்சியினர் வந்தாலும் ஆக்கிரமிக்க இயலாது என மார்தட்ட ஆரம்பித்தனர் அதிமுகவினர். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி தவெக ஷாக் கொடுத்தது.

2ஆவது இடத்தில் திமுக
இறுதியில், திமுக வேட்பாளர் பரந்தாமனை 20 ஆயிரத்து 40 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியை தனதாக்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல். கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இவர் 69 ஆயிரத்து 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது 74 ஆயிரத்து 48 வாக்குகளை பெற்று மீண்டும் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

அதேபோல், திமுக வேட்பாளர் பரந்தாமன் 54 ஆயிரத்து 8 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தையும், அதிமுகவின் கணிதா சம்பத் 47 ஆயிரத்து 450 வாக்குகள் பெற்று 3 ஆவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஜானகிராமன் 2 ஆயிரத்து 709 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுகந்தி ஆயித்து 986 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.

வெற்றி மகிழ்ச்சி
நாங்கள் பட்ட கஷ்டத்திற்கான பலன் கிடைத்துவிட்டது எனக்கூறி, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் செய்த சைகையை மரகதம் குமரவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் செய்துகாட்டி, வெற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், விசிலை ஊதியும் மரகதம் குமரவேல் உற்சாகத்தை வெளிப்படுத்த தவெக தொண்டர்களும் நிர்வாகிகளும் மேளதாளம் முழங்க, மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதனை தொடர்ந்து, மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு இனிப்பு ஊட்டி நன்றி தெரிவித்த மரகதம் குமரவேல், இந்த வெற்றியை மக்களுக்கே உரித்தாக்குவதாகவும் தெரிவித்தார்.

வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் இருந்து வாங்கிய கையோடு, மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் மரகதம் குமரவேல்.

Related Link
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா வெற்றி

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா வெற்றி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக, தவெக அரசுக்கு திமுக கண்டனம்

42
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved