news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா வெற்றி
tv

Also Watch

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா வெற்றி

தவெக கோட்டையான தாராபுரம்

49

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார் த.வெ.க.வின் வேட்பாளர் சத்யபாமா. முதல் மூன்று சுற்றுகளில் பின் தங்கியவர் அடுத்தடுத்து வந்த சுற்றுகளில் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றியை வசப்படுத்தினார்

தாராபுரம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யாவைவிட 9,471 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றியை தன் வசமாக்கினார்.

தாராபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்
சத்தியபாமா தவெக – 66,841
சுகன்யா திமுக – 57,370
பானுமதி அதிமுக – 45,280
கார்த்திகா நாம் தமிழர் – 5,268
லட்சுமணன் இ.கம்யூ – 1,157

இடைத்தேர்தலில்...
தாராபுரம் சட்டசபைத் தொகுதிக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை பரபரப்பு

இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சில சுற்றுகளில் அதிமுக முன்னிலை வகித்தது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் தவெக முன்னிலை பெற்றது. அதிமுக 3ஆவது இடத்துக்கு சென்றது.

2026ல் அதிமுக வேட்பாளர்
கடந்த 2026ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகளும், தவெக வேட்பாளர் கௌரி சித்ரா 46,438 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகளும் பெற்றிருந்தனர். பொது தேர்தலில் தாராபுரத்தில் தவெகவுக்கு 3ஆவது இடம் தான் கிடைத்தது.

அதிமுகவில் இருந்து...
16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிமுக எம்.எல்.ஏ. ஆன சத்தியபாமா, பின்னர் அதிமுகவில் இருந்து விலகிய கையோடு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ததால் தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

66,841 வாக்குகள் பெற்று...
இடைத்தேர்தலில், தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட சத்யபாமா 66,841 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் சுகன்யாவை 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக 81,100 வாக்குகள் பெற்ற சத்யபாமா, தற்போது தவெக வேட்பாளராக 66,841 வாக்குகள் பெற்றுள்ளார்.

கடந்த தேர்தலைவிட 14,259 வாக்கு குறைவாகப் பெற்றிருந்தாலும், கட்சி மாறிய பின்னரும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
இதே பொதுத் தேர்தலில் தாராபுரத்தில் 46,438 வாக்குகள் பெற்று 3ஆவது இடத்தில் இருந்த தவெக, தற்போது சத்தியபாமாவை வேட்பாளராக நிறுத்தி முதலிடம் பெற்று உள்ளது.

வாக்கு வங்கியை தக்க வைத்த திமுக
கடந்த சட்டசபை தேர்தலில், திமுக வலிமையான கூட்டணியில் இருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகியவை தவெகவுக்கு ஆதரவளித்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இந்த நிலையிலும், திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளைப் பெற்றுள்ளார். தாராபுரத்தில் கூட்டணிகள் மாறிய பின்னரும் திமுக தனது வாக்கு வங்கியில் பெரும்பகுதியைத் தக்கவைத்துள்ளது.

3ஆவது இடத்தில் அதிமுக
பொது தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 81,100 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகள் பெற்று, 3ஆவது இடத்திற்கு சென்றுள்ளார். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தாராபுரம் தொகுதியில், இடைத்தேர்தலில் அதிமுக 3ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.

Related Link
அக்.10ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

அக்.10ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்களுக்குக் கிடைத்த வெற்றி என முதல்வர் விஜய் நெகிழ்ச்சி

43
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved