நடிகர் வெற்றி நடிக்கும் "BURIED" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் ஆரி அர்ஜுனா ஆகியோர் வெளியிட்டுள்ளனர். "வெப்" படத்தை இயக்கிய ஹாரூண் கதை எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில், கதாநாயகியாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா நடிக்கிறார்.
மேலும், சாந்தினி தமிழரசன், பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார்.
மம்முட்டி-மிஷ்கின் கூட்டணியில் புதிய திரைப்படம்
TRAIN படத்தை தொடர்ந்து புதிய திரைப்படம் இயக்க திட்டமிட்டுள்ள மிஷ்கின், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை சந்தித்து புதிய கதை ஒன்றை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கதை பிடித்தும் 30 நாட்களுக்குள் தன்னுடைய காட்சிகளை படமாக்கினால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வதாக மம்முட்டி கூறியுள்ளார். இதற்கு மிஷ்கின் உடன்பட்டால் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
"ட்ரோன்ஸ்" திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியீடு
"ட்ரோன்ஸ்" திரைப்படத்தின் "டெரர் எரர்" என்ற 2வது பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
காமெடி, பேண்டஸி, ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த படத்தை ஜி.எம்.மார்கன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் ஆர்ஜே.தீபக் நடிகராக அறிமுகமாகிறார். படம் வரும் 16ம் தேதி ரிலீஸாகிறது.