Also Watch
Read this
அரசுப் பள்ளிகளில் இனி வாரம் 5 நாட்கள் கட்டாய உடற்கல்வி வகுப்பு, எக்காரணம் கொண்டும் வகுப்பை ரத்து செய்யக் கூடாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறி உள்ளார்.

திருத்திய கால அட்டவணை
தமிழக அரசின், மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான திருத்திய கால அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது;
இனிமேல், வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்பு நடத்தப்படும். இதற்கு வழிவகை செய்யும் திருத்திய கால அட்டவணையை வெளியிடுகிறோம். இனிமேல், தினந்தோறும் மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்பு நடத்தப்படும்.

உடற்கல்வி வகுப்புகளைக் காட்டாயமாக ஒதுக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் அந்த வகுப்புகளை நிறுத்தக்கூடாது.

ஊக்குவிக்க வேண்டும்...
உடற்பயிற்சி வகுப்புக்கு மாணவர்கள் செல்ல ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். இதற்கான மைதானங்கள், பயிற்சி, விளையாட்டு உபகரணங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில் 2 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளதாக கண்டறிந்தேன்.

ஒரு உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடம்கூட இருக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளேன். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

விளையாட்டில் இருந்து...
திருத்திய கால அட்டவணை மூலம் மாணவர்களுக்கு தினமும் உடற்கல்வி வகுப்பு கிடைத்துள்ளது. சாதி, மதம், நிறம், விளையாட்டு திறன், உயரம், குள்ளம் என எதற்காகவும், எந்தக் குழந்தையையும் விளையாட்டில் இருந்து ஒதுக்கி வைக்காதீர்.
இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved