அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சியினர் தங்களை தக்க வைத்துக்கொள்ள உதவும் வகையில் உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சுமார் 26 ஆயிரத்து 343 கோடி ரூபாயை நன்கொடையாக வாரி வழங்கியுள்ளார்.
எதிர்காலத்தில் அரசியல் செலவினங்களை மிகவும் குறைத்துக் கொள்ளப் போவதாக மஸ்க் கடந்த ஆண்டு அறிவித்ததற்கு முற்றிலும் மாறாக,2026 ல் அவரது மொத்த அரசியல் செலவினம் 34 ஆயிரத்து 976 கோடி எட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இது 2024 அதிபர் தேர்தலின் போது டிரம்ப் வெற்றிப் பெற செலவிட்ட 27ஆயிரத்து 721 கோடி ரூபாயை விட மிக அதிகமாகும்.
பனாமாவில் 6.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்
மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் கடற்பகுதியில் 6.0 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் தொடர்ச்சியாக திங்கள்கிழமை கடற்பகுதியில் மீண்டும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. தொடர் நில அதிர்வுகளால் கடலோரப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Breaking Bad நடிகர் ஆர்.ஜே.மிட்டே 34 வயதில் உயிரிழப்பு
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற Breaking Bad இணைய தொடரில், வால்டர் ஒயிட் ஜூனியர் கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமான இளம் நடிகர் ஆர்.ஜே.மிட்டே உயிரிழந்தார். வெறும் 34 வயதே ஆன மிட்டே மூளை முடக்குவாதத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், டெக்சாஸில் உள்ள வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.