news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

பாகிஸ்தான் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

Fatah-2 ER

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பாலிஸ்டிக் ஏவுகணை

நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் "ஃபதா-2 ER"

  • நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ஃபதா-2 ER ((Fatah-2 ER)) ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
  • இந்த ஏவுகணை மேம்பட்ட வழிகாட்டுதல் தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன ஏவியோனிக்ஸ் வசதிகளை கொண்டுள்ளதாகவும், எதிரியின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளையும் முறியடிக்கும் திறன் கொண்டது எனவும் தெரிவித்துள்ளது. இந்த சோதனைக்காக பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பல்கேரியா கடலில் 2 வர்த்தக கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்

  • கருங்கடலில் பல்கேரியா நாட்டின் கடற்கரைக்கு அருகே 2 வர்த்தக கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில், 11 மாலுமிகள் மாயமாகியுள்ளனர். உக்ரைனுக்கு சொந்தமான மால்டா நாட்டு கொடியுடன் பயணித்த "செல்சியா 3" என்ற கப்பல் மீதும், மற்றொரு கப்பல் மீதும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
  • இதில், செல்சியா 3 கப்பலில் இருந்த 15 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டன. மற்றொரு கப்பலில் இருந்து ஒரே ஒரு மாலுமி மட்டுமே மீட்கப்பட்ட நிலையில், கடலில் மூழ்கி மாயமான மற்ற 11 மாலுமிகளை தேடிவருகின்றனர்.

லாடாக்கில் உள்ள 28 இடங்களுக்கு பெயர் சூட்டிய இந்தியா

  • லடாக்கில் உள்ள 28முக்கிய இடங்களுக்கு இந்தியா பெயர்களைச் சூட்டியுள்ளதற்கு சீனா எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இந்தியா தன்னிச்சையாக உருவாக்கிய லடாக் யூனியன் பிரதேசத்தை சீனா ஒருபோதும் அங்கீகரித்ததில்லை என்றும், இந்தியாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் கூறியுள்ளது.
  • பெயர்களை மாற்றுவதால் எல்லைப் பகுதியில் உள்ள உண்மை நிலவரம் எவ்விதத்திலும் மாறிவிடாது என்றும் சீனா தெரிவித்துள்ளது.


Related Link
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நவராத்திரி கொண்டாட்டம்

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நவராத்திரி கொண்டாட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னைக்கு குடிநீர் வழங்க புதிய திட்டம் 9 குடிநீர் ஆதாரங்கள் இணைப்பு

45
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved