Also Watch
Read this
By: Manigandan Raja

பாதுகாப்புப் படையினரின் கூட்டு தேடுதல் வேட்டையில் சிக்கின
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகளின் பதுங்குக்குழி கண்டறியப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பூஞ்ச் மாவட்டம் சுதர்பான் குகை பகுதியில் AK-47 துப்பாக்கி, AK-47 மேகசின், 6 கையெறி குண்டுகள், 30 சுற்றுகள் கொண்ட 7.62 மில்லி மீட்டர் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டல்

மகாராஷ்டிராவில் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற சிறுமியை, கட்டுமான தொழிலாளி ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஷால் சிங் என்பவன் திருநீறு பூசுவது போல சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான்.
பீகார் படகு விபத்து - பிரதமர் மோடி இரங்கல்

பீகார் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved