news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

நெல்லுடன் சேர்ந்து வளரும் மீன்கள் வயலிலும், குட்டையிலும் நீந்தி செல்ல வசதி

லாபகரமான இயற்கை விவசாய முறை

34

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மயிலாடுதுறை மாவட்டம், நல்லத்துக்குடி கிராமத்தில் நெல் சாகுபடியுடன் சேர்த்து மீன்களையும் வளர்க்கும் ஒரு லாபகரமான வேளாண் முறையை செய்து விவசாயி பலரையும் வியக்க வைத்துள்ளார்.

நெல்வயலில் மீன்களை வளர்த்து இயற்கை விவசாயி புதியதோர் முயற்சியில் இறங்கி வருமானத்தை ஈட்டி கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

5 ஏக்கர் நிலத்தில்...
மயிலாடுதுறை மாவட்டம், நல்லத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி சக்தி வடிவேல். இவர் தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் நிலையில் நெல்வயலில் மீன்களை வளர்த்து புதிய முயற்சியை கையிலெடுத்துள்ளார்.

தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் தூயமல்லி நெல் ரகத்தை நடவு செய்த விவசாயி, கட்லா, ரோகு, மிர்கால் ரூப்சந்த், ஆந்திரா சிலேபி உள்ளிட்ட மீன்களை விட்டுள்ளனர்.

ஏக்கருக்கு 3 ஆயிரம் மீன்கள் என்ற அடிப்படையில் இரண்டு ஏக்கர் நிலத்தில், 6 ஆயிரம் மீன் குஞ்சு வளர்த்து வருகிறார். அதற்காக வயலைச் சுற்றிலும் சுமார் நான்கு அடி ஆழத்துக்கு பள்ளம் அமைத்து, ஐந்து அடி உயரத்துக்கு வரப்புகளை கட்டியுள்ளார்.

மழைக்காலங்களில்...
வயலின் அருகாமையில் மீன்கள் வளர்வதற்காகக் குட்டை ஒன்றையும் அமைத்துள்ளார். அதோடு வயலில் இருந்து மீன்கள் குட்டைக்கு செல்லும் வகையில் குழாய்களை அமைத்துள்ள விவசாயி சக்தி வடிவேல், மழைக்காலங்களில் வெள்ளநீர் புகுந்துவிடாமல் வரப்புகள் தடுத்து வைக்கும் என கூறினார்.

மீன் குஞ்சுகள் நெல்வயலில் உள்ள புழு, பூச்சிகளை உணவாக உட்கொள்வதோடு மீன்களுக்கு, மேலும் உணவு தேவைப்பட்டால் புரதச்சத்து நிறைந்த தாவரம் அசோலாவை போட்டுள்ளார். மேலும், வரப்புகளில் தென்னை, வாழை, முருங்கை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்து சமயோஜிதமாக விவசாயம் செய்து வருகிறார்.

Related Link
இது தாமரை விதைகள் இல்லையா? பஞ்சுபோன்று வெடித்து விழும் மக்கானா

இது தாமரை விதைகள் இல்லையா? பஞ்சுபோன்று வெடித்து விழும் மக்கானா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐந்து நாட்கள் மிக கன மழைக்கு வாய்ப்பு

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved