news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஜனாதிபதி, முதலமைச்சர் விஜய் ஆயுத பூஜை வாழ்த்து

"கல்வி, தொழிலில் வெற்றித் தமிழகத்தை படைப்போம்"

41

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்களைப் போற்றும் ஆயுத பூஜை நன்னாள் என முதலமைச்சர் விஜய் வாழ்த்து கூறி உள்ளார்.
நன்மை தரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம் எனவும் கூறி உள்ளார்.

ஜனாதிபதி வாழ்த்து
துர்கா பூஜை திருவிழாவை முன்னிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்குத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

துர்கா பூஜை திருவிழா பெண்களின் வலிமையையும் சக்தியையும் போற்றும் நமது நாட்டின் உன்னத பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது என்றும், இந்த புனிதமான பண்டிகை இந்தியாவின் வளமான பண்பாடு, நம்பிக்கை மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தின் அடையாளமாகும் என்றும் கூறி உள்ளார்.

மா துர்கையின் அருள் அனைத்து குடிமக்களுக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரவும், நாடு தொடர்ந்து அதிவேக வளர்ச்சிப் பாதையில் பயணிக்கவும் பிரார்த்தனை செய்வதாகவும், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் மா துர்கா தேவி தைரியம், புத்தி கூர்மை மற்றும் நல்வாழ்வை வழங்கட்டும் என்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்தி உள்ளார்.

முதல்வர் விஜய் வாழ்த்து
இதுதொடர்பாக, முதல்வர் விஜய் கூறி இருப்பதாவது;
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றித் தமிழகத்தை...
இந்த திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும். நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்.

ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும். அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்.
இவ்வாறு முதல்வரும் தவெக தலைவருமான விஜய் தெரிவித்து உள்ளார்.

Related Link
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு" என மு.க.ஸ்டாலின் கண்டனம்

37
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved