news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

"Jailer 2வின் REAL HERO இவர் தான்"

யார் இந்த நமோ நாராயணா?

49

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

"அவன் எடுத்தது யானையும் இல்ல, வெட்டுனது ராஜாவும் இல்ல, ஆனா எவ்ளோ கான்ஃபிடெண்ட்டா நடந்து போறான் பாரு," என்ற டயலாக் உடன், ஜெயிலர் 2 திரைப்படத்தில் பழக்கடை மூர்த்தியாக கலக்கிய நடிகர் நமோ நாராயணாவின் காமெடி காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் மீம்களாக ரெக்கை கட்டி வருகிறது.

வசூல் மழையில்...
பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்துவரும் ரஜினியின் ஜெயிலர்-2 ரிலீஸான நாளிலிருந்து திரையரங்குகளில் விசில் சத்தம் விண்ணை முட்டுகிறது. ஆனால், இந்த படத்தின் First half தியேட்டரை தாள முடியாத சிரிப்பலையில் அதிர வைத்து, ரசிகர்களின் வயிறை குலுங்க செய்பவர் வேறு யாரும் இல்லை. இந்த பழக்கடை மூர்த்தி அண்ணன் தான்.

பழக்கடை மூர்த்தி...
எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் பட்டையை கிளப்பியிருந்தாலும், இணையத்தையும், திரையரங்குகளையும் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்து, நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்து கொண்டிருப்பவர், பழக்கடை மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த நமோ நாராயணாதான்.

யார் இந்த மூர்த்தி?
ஜெயிலர் முதல் பாகத்தின் கதை முடிந்து 3 மாதங்களுக்கு பிறகு நடப்பது போல தொடங்கும் இந்த கதையில், வில்லன் கேங் ரஜினியை தேடி வரும் முன்பே, ரஜினி அந்த வில்லன் கும்பலுக்குள் ஊடுருவ பயன்படுத்தும் ஒரு மாஸான பகடைக்காய்தான் இந்த மூர்த்தி. யார் அந்த மூர்த்தி? என்ற கேள்வியோடு தொடங்கும் நமோ நாராயணாவின் கதாபாத்திரம், ’தான் ஒரு பெரிய ரவுடி, தன்னைப்பார்த்து ஊரே பயப்படுகிறது, தான் செய்வதுதான் 100 சதவீதம் சரி’ என்ற வெற்று உதாருடன் சுற்றும் ஒரு லோக்கல் கேரக்டர்.

சிரிப்பலையில்...
படத்தின் முதல் பாதி முழுவதையும் தனது அபாரமான Body Language மற்றும் அசாத்தியமான டயலாக்குகளாலும் மூர்த்தி கதாபாத்திரமே ஆக்கிரமித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியின் படத்தில் இவ்வளவு கலாட்டாவான நகைச்சுவை காட்சிகள் அமைந்திருப்பது படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக மாறியிருக்கிறது. திரையரங்கில், ’அவன் எடுத்தது யானையும் இல்ல, வெட்டுனது ராஜாவும் இல்ல, ஆனா எவ்ளோ கான்ஃபிடெண்ட்டா சொல்லிட்டு நடந்து போறான் பாரு,’ என்ற வசனம் வரும்போது ஒட்டுமொத்த தியேட்டரும் சிரிப்பலையில் அதிரும் வகையில் அமைந்திருக்கிறது.

தினமும் பார்க்ககூடிய...
அதேபோல், ’எனக்கு தெரியாமலேயே உங்களை பிடிச்சுடுச்சு,’ என்று ரஜினி சொல்லும்போது, நக்கல் தொனியில், ‘I don't care’ என மூர்த்தி கொடுக்கும் ரியாக்சன், படம் முடிந்து வெளியே வந்த பிறகும் ரசிகர்களின் மனதை விட்டு அகலாமல் ரீங்காரமிட்டு கொண்டிருக்கிறது. நம்மை சுற்றி தினமும் பார்க்கக்கூடிய மனிதர்களின் சாயலில் இந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம்.

யார் இந்த நமோ நாராயணன்
திரையில் மூர்த்தி தோன்றும் போதெல்லாம் கைதட்டல்களும், விசில் சத்தங்களும் விண்ணை பிளக்கின்றன. இதனால், கூகுள், சோஷியல் மீடியாக்களில், ’யார் இந்த நமோ நாராயணா?,’ என ரசிகர்கள் ஆர்வத்துடன் தேடி வருகிறார்கள்.

இணைய தளங்களில்...
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மெர்குரி, டோரதி போன்ற கதாபாத்திரங்களை வைத்து படங்கள் எடுக்கும்போது, ’நெல்சன் சார் ஏன் மூர்த்தி கதாபாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து தனியாக ஒரு Spin off படம் எடுக்க கூடாது?,’ என்றும், ’பழக்கடை மூர்த்தி அண்ணே பயலுகடா,’ என்றும் இணையத்தில் ரசிகர்கள் நெல்சனுக்குத் தொடர் கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்.

பிடித்த கதாபாத்திரம்...
படத்தின் பிரமோஷன் பேட்டிகளில், ’படத்தில் உங்களுக்கு ரொம்பப் பிடித்த கதாபாத்திரம் எது?,’ என்ற கேள்விக்கு, நடிகர் ரஜினியும், இயக்குநர் நெல்சனும் யோசிக்காமல் நமோ நாராயணாவின் பெயரை குறிப்பிட்டதும் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

தனது இயல்பான நடிப்பால் ஒட்டுமொத்த இந்திய அளவிலும் டிரெண்டிங்கில் இருக்கும் நமோ நாராயணாவின் பழக்கடை மூர்த்தி பாத்திரம், ஜெயிலர்-2 திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிப் புள்ளியாக உருவெடுத்திருக்கிறது.

Related Link
ரஜினியின் ஜெயிலர்-2 திரைப்படம் எப்படி இருக்கிறது?

ரஜினியின் ஜெயிலர்-2 திரைப்படம் எப்படி இருக்கிறது?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனாதிபதி, முதலமைச்சர் விஜய் ஆயுத பூஜை வாழ்த்து

38
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved