பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட ரஷ்ய அதிபர் புதின்
அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ரஷ்ய அதிபர் புதின் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளார். அதிபர் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே நடந்த முக்கிய சந்திப்புக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இந்தப் பேச்சுவார்த்தையானது நவம்பரில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங்க் சேவையை கட்டுப்படுத்துவது டிரம்ப் அல்ல
உக்ரைனின் ஸ்டார்லிங் சேவைகளை கட்டுப்படுத்துவது டிரம்ப் அல்ல, எலான் மஸ்க் தான் என அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்ள உக்ரைன் நம்பியிருக்கும் ஸ்டார்லிங்கின் ஸ்டார்ஷீல்டின் வேகத்தை குறைக்க மஸ்க் உத்தரவிட்டதாக செய்தி வெளியான நிலையில், முன்னதாகவே அவரும் அமெரிக்க அதிபரும் இதுகுறித்து விவாதித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், மஸ்க்கின் முடிவு குறித்து தங்களுக்கு தெரியாது என ரூபியோ கூறியுள்ளார்.