ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் 7 நாட்களில் 549 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரைக்கு வந்த முதல் வாரத்திலேயே மிக அதிக வசூலை அள்ளிய முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.
இராமாயணம் பாகம்-1 ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியீடு
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகும் ‘ராமாயணம் பாகம் ஒன்று’ திரைப்படம், திரையரங்க வெளியீட்டுக்கு பிறகு ஜியோ ஹாட்ஸ்டாரில் பே-பர்-வியூ முறையில் வெளியாக உள்ளது. இதற்கிடையே, படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளுக்காக ஸ்டார் குழுமம் 450 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.