சுந்தர்பிச்சை மறுப்பு தெரிவித்ததாக டிரம்ப் சுவாரஸ்ய தகவல்
அட்லாண்டிக் பெருங்கடலுக்கு டிரம்ப் ஓசன் என பெயரை மாற்ற விரும்பியதாகவும், ஆனால் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பெருங்கடல்கள் என்பவை பல நாடுகளை உள்ளடக்கியவை, தயவுசெய்து அதைச் செய்யும்படி எங்களிடம் கேட்காதீர்கள் என திட்டவட்டமாக சுந்தர்பிச்சை கூறியதாக தெரிவித்தார்.
அரோம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுதிகள் தாக்குதல்
சவுதி அரேபியாவின் அரோம்கோ எண்ணெய் நிறுவனத்தின் மீது ஹவுதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்ட நிலையில், இந்தியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அராம்கோ நிறுவனத்தைக் குறிவைத்த ஒரு ட்ரோனை இடைமறித்து அழித்ததாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் ட்ரோன் சிதறல்கள் விழுந்ததில் பிலிப்பைன்ஸ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.