Also Watch
Read this
By: Manigandan Raja

PM E-DRIVE திட்டம்
மத்திய அரசின் PM E-DRIVE திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரை வழங்கப்பட்டு வரும் மானிய திட்டத்திற்கான காலக்கெடு வரும் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைகிறது ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டுவிட்டதால், கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டால் மட்டுமே இந்த திட்டத்தை தொடர முடியும் என்று கூறப்படுகிறது.
Honda ADV160 மேக்ஸி விரைவில்

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட Honda ADV160 மேக்ஸி ஸ்கூட்டரை Honda நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது உயரமான முன்புறம், பெரிய Adjustable Windscreen, டூயல் LED ஹெட்லேம்ப்கள், அகலமான ஹேண்டில்பார் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றுடன் ஸ்போர்ட்டியாக காட்சியளிக்கும் இந்த ஸ்கூட்டர், சுற்றுலாப் பயணங்களுக்கு ஏற்றதாகக் கூறப்படுகிறது.
ZR-V e:HEV அறிமுகம்

Honda Cars India நிறுவனம் தனது புதிய ZR-V e:HEV என்ற பிரிமீயம் ரக SUV-யை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது 2.0 லிட்டர் Atkinson Cycle பெட்ரோல் என்ஜின், 184 பிஎஸ் பவர், 315 Nm டார்க், LED ஹெட்லேம்ப்கள், ஸ்போர்ட்டியான அலாய் வீல்கள், வயர்லெஸ் Apple CarPlay மற்றும் Android Auto உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட இந்த காரின் விலை ரூ.47.99 லட்சமாக நிர்ணயம்.