டெஸ்லா நிறுவனம் டெல்லியில் தனது 3வது விற்பனை மையத்தை நொய்டாவில் உள்ள Sector 98-ன் Skymark One-ல் நிறுவியுள்ளது
டெஸ்லா வாகனங்களைப் பார்வையிடவும், சோதனை ஓட்டங்களுக்கு ஏற்பாடு செய்யவும், ஆர்டர்களைப் பதிவு செய்யவும் இங்கு அனுமதிக்கப்பட உள்ளது. இதன் திறப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
புதிய Fortuner Leader மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது
Toyota நிறுவனம் தனது புதிய Fortuner Leader மாடல் காரை 2 வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது
4x2 manual வேரியண்ட் ரூ.36.51 லட்சம் விலைக்கும், 4x2 automatic வேரியண்ட் ரூ.38.72 லட்சம் விலைக்கும்(எக்ஸ் ஷோரூம்) விற்பனையாகிறது. இதற்கான புக்கிங் அக்.12 முதல் துவங்கும் என தகவல்.
VinFast எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
வியட்நாமை சேர்ந்த VinFast எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் இந்தியா முழுவதும் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50-க்கும் மேற்பட்ட டீலர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது
விற்பனை மட்டுமின்றி, விற்பனைக்கு பிந்தைய சேவையிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாம்.