news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews வெளியானது 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் 2வது புரோமோ பாடல்
tv

Also Watch

tv

Read this

வெளியானது 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் 2வது புரோமோ பாடல்

Vishwanath and Sons

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Surya song

ஜூலை 25-ம் தேதி சூர்யா ரசிகர்களுக்கு SURPRISE

வாத்தி, லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்துல சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக இருக்கு.

இந்த நிலையில் படததோட 2வது புரோமோ பாடல் தற்போது வெளியாகியிருக்கு. ஏற்கனவே முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த 2வது புரோமோ பாடலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வருகிற ஜூலை 25 ஆம் தேதி வெளியாகும்னு குறிப்பிடப்பட்டிருக்கு.

யோகி பாபுவின் 'காகங்கள்' படப்பிடிப்பு நிறைவு


ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் யோகி பாபு, கிஷோர், விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த 'காகங்கள்' படப்பிடிப்பு நிறைவடைந்ததா படக்குழு தெரிவிச்சிருக்காங்க.

நடிகர் யோகி பாபுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் படப்பிடிப்பு தளத்திலே படக்குழுவினர் கேக் வெட்டி அவரோட பிறந்தநாளையும் படப்பிடிப்பு நிறைவையும் ஒண்ணா கொண்டாடிருக்காங்க. தற்போது, இந்த படத்தின் டப்பிங், ஒலிவடிவமைப்பு, பின்னணி இசை, விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்ட பின்னணிப் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வர்றதா தகவல் வெளியாகிருக்கு.

விரைவில் திரையரங்கிற்கு வரும் 'அப்பா குட்டி'


இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, பிரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள், அருவி மதன்குமார், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'அப்பா குட்டி' திரைப்படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகியிருக்கு.

ஏற்கனவே படத்தின் ப்ர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள்ட்ட நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் செகண்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டிருக்காங்க.

தந்தை-மகள் பாசப் பிணைப்பை மையமாக கொண்ட இந்த படத்தின் அனைத்து தயாரிப்புப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், விரைவில் திரையரங்குகளில் படம் வெளியாகத் தயாரா இருக்கறதாவும் தகவல்கள் வெளியாகிருக்கு.

Related Link
நீட் தேர்வுக்கு எதிராக பா.ரஞ்சித் தலைமையில் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக பா.ரஞ்சித் தலைமையில் போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்ஜெட் ஃபிரண்ட்லி iQOO செல்போன்கள்

0
6 mins agoshare
iQOO செல்போன்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau