Also Watch
Read this
By: Manigandan Raja

ஏ.ஜி.எஸ் 29 திரைப்படத்தின் பூஜை விழா
AGS ENTERTAINMENT நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் 'AGS 29' திரைப்படத்தின் பூஜை விழா நடைபெற்றது. ஆனந்தன் இயக்கத்தில் ஜெய் கதாநாயகனாகவும், பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ரவி பஸ்ரூர் இசையில் உருவாகும் இத்திரைப்படத்தில் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பாலாகிருஷ்ணாவின் 111 திரைப்படத்துக்கு 'டாடா என தலைப்பு
கோபிசந்த் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் பாலகிருஷ்ணாவின் 111ஆவது திரைப்படத்துக்கு 'DADA' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணாவின் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் கூடிய கிளிம்ப்ஸ் வீடியோவையிம் படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படத்தை டிசம்பர் 24ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

நடிகர் கார்த்தி நடித்துள்ள "சர்தார் -2" திரைப்படம்
நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் -2’ திரைப்படத்தின் ‘கோன் வருவான்’ பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. விவேக் எழுதியுள்ள இந்த பாடலை அலெக்சாண்டர் ஜாய், சுபலாஷினி ஆகியோர் பாடியுள்ளனர்.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved