news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மக்கள் மனதை தொட்ட நூறு சாமி
tv

Also Watch

tv

Read this

மக்கள் மனதை தொட்ட நூறு சாமி

நூறு சாமி

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பிச்சைக்காரன் பட ஹிட் கொடுத்த இயக்குநர் சசி இயக்கத்திலேயே விஜய் ஆண்டனி, சுவாசிகா, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நூறு சாமி படம் கடந்த ஜூன் 19-ம் தேதி வெளியானது. பொதுவா பெண்கள், குடும்ப படங்களை மையப்படுத்தி எடுக்கும் இயக்குனர் சசினு சொல்வாங்க.

4 நாட்களில் படம் செய்த வசூல் என்ன?

அதே மாதிரி, இந்த படத்தையும் அப்படி ஒரு ஜானரில் தான் எடுத்துருக்கிறாரு. இந்த படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே மக்கள் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துட்டு வராங்க. இதற்காகவே நடிகை சுவாசிகா சமீபத்தில் "தமிழ் ரசிகர்கள் தான் என்னோட ஆக்சிஜன் என்றும் உங்களோட இந்த ஆதரவுக்கு ரொம்ப நன்றின்னு" வீடியோ மூலம் தெரிவிச்சிருந்தாங்க. இந்த நிலையில், நூறு சாமி படம் ரிலீஸ் ஆன 4 நாட்களில் ரூ. 8 கோடி வரை வசூல் செய்திருப்பதா தகவல் வெளியாகிருக்கு.

‘​கான் சிட்​டி’​யில் நடிக்க தயக்கமா இருந்துச்சு

அறி​முக இயக்​குநர் ஹரிஷ் துரை​ராஜ் இயக்​கத்தில் ​அர்​ஜுன் தாஸ், அன்னா பென், யோகி​பாபு, வடிவுக்​கரசி, மாஸ்டர் அகிலன் உள்பட பலர் நடித்​துள்​ள ‘​கான் சிட்​டி’​ திரைப்படம் வருகிற ஜூன் 26ம் தேதி வெளியாக இருக்கிறது. பவர் ஹவுஸ் பிக்​சர்ஸ் தயாரிக்​கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்​டன் இசை அமைத்​திருக்கிறாரு. இந்த நிலையில், சமீபத்தில் படக்​குழு​வினர் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பில் முக்கிய தகவலை பகிர்ந்துருந்தாங்க. அப்போ, நடிகை அன்னா பென் பேசியபோது, "இது என்னோட 2-வது தமிழ் திரைப்​படம். ‘கொட்டுக்காளி’ படத்​தில் நான் நடித்த மீனா கதா​பாத்​திரத்​துக்கு முற்றிலும் எதிர்​மாறான வேடத்​தில் இதில் நடித்​திருக்​கிறேன் என்றும் இயக்​குநர் ஹரிஷ் முதன்​முதலில் இந்​தக் கதா​பாத்​திரத்தை என்னிடம் கூறிய​போது எனக்கு பதற்​ற​மாக இருந்​தது. ஏன்னா, இது​வரை நான் நடித்​தி​ராத புதிய பரி​மாணத்​தில் இருக்​கும் கதா​பாத்​திரம் இது.." என்று தெரிவித்துள்ளார்.

தொடர் வசூல் வேட்டையில் 'எங்கள் தங்கம்'

நடிகை சமந்தா நடித்துள்ள 'மா இன்டி பங்காரம்' திரைப்படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் கடந்த ஜுன் 19ம் தேதி வெளியாகிருந்துச்சு. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை சமந்தா உடன், கௌதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்காங்க. அதே மாதிரி, சமந்தாவின் கணவர் 'ராஜ் நிடிமொரு' தான் இந்த படத்திற்கு கதை எழுதியிருந்தாரு.  இந்த நிலையில் 'எங்கள் தங்கம்' படம் வெளியான 4-ஏ நாட்களில் 48 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகிருக்கு. வரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும்னு சொல்லப்படுகிறது.

மீசைய முறுக்கு-2 படத்தின் அடுத்த பாடல் எப்போ?

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் ‘மீசைய முறுக்கு-2’ படத்தில் இருந்து ‘அடி போடி’ பாடல் நாளை வெளியாகும்னு படக்குழு அதிகாரபூர்வமா அறிவித்திருக்காங்க. இந்த படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன், பாலிவுட் நடிகை கேட்டிகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்ஷத் கான், "ஆடுகளம்" நரேன், நாசர், ரம்யா ரங்கநாதன், ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறாங்க. கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடந்து வருவதா தகவல் வெளியாகிருக்கு. ஏற்கனவே "ஆரா பத்துக்கு ஆரா" என்ற முதல் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுருந்துச்சு. அதன் பின், "பப்பாளி பழமே" என்ற இரண்டாவது பாடல் வெளியாகிருந்துச்சு. இந்த நிலையில் அடுத்த பாடல் நாளை வெளியாகும்னு படக்குழு அறிவித்த செய்தி தற்போது மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திட்டு வருது.

18 நாட்களில் 'பரிமளா & கோ' செய்துள்ள வசூல்?

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியான பரிமளா & கோ படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, அனந்திகா, சாண்டி, மிஸ்கின் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்திருந்தாங்க. இந்த படத்தை லைகா மற்றும் பசங்க தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்காங்க. இந்த நிலையில், படம் வெளியான 18 நாட்களில் உலகளவில் 19.5 கோடி ரூபாய் வசூலித்துருக்கிறதா தகவல் வெளியாகிருக்கு.

இந்த தேதியில 'டிமான்டி காலனி 3' வெளியாகும் :

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் 'டிமான்டி காலனி 3' திரைப்படம் வருகிற செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமா அறிவித்திருக்காங்க. இந்த படத்தில், அருள்நிதியுடன் ப்ரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்காங்க.படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்காரு. இந்த படம் 2015-ல வெளியான 'டிமான்டி காலனி' மற்றும் அதன் பின் வெளியான டிமான்டி காலனி 2-வை தொடர்ந்து தற்போது ஹாரர் த்ரில்லர் திரைப்படமா 'டிமான்டி காலனி 3' உருவாகிருக்கு.

புதிய காரை வாங்கிய பிக் பாஸ் பிரபலம் :

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்ட அனிதா, பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகிருந்தாங்க. அதன் பின், பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துருந்தாங்க. அப்படியே சினிமாவுக்கு தான் நடிக்க போவாங்கனு பாத்தா இவங்க புது ரூட்டை கையில் எடுத்துருந்தாங்க. அது தான், சொந்தமா யூடியூப் பக்கத்தை ஆரம்பச்சி அதுல தொடர்ந்து வீடியோஸ் போட்டுடு வந்தாங்க. இந்த நிலையில், தற்போது TATA PUNCH காரை நான் வாங்கிருக்கேன்னு தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுருக்காங்க. இதற்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சொல்லிட்டு வராங்க.

Related Link
முதல்வர் விஜய்யுடன் பிறந்தநாளை கொண்டாடிய திரிஷா..

முதல்வர் விஜய்யுடன் பிறந்தநாளை கொண்டாடிய திரிஷா..

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
10 hrs 20 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau