Also Watch
Read this
By: Manigandan Raja

மைசா திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் மைசா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியாகிறது. ரவீந்திர புல்லே இயக்கும் இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தில், கோண்டு பழங்குடியின பெண்ணாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும், மைசா திரைப்படம் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சினிமா படங்களுக்கான CBFC சான்றிதழ் விதி
சினிமா படங்களுக்கான CBFC சான்றிதழ் விதிகளில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் பயன்படுத்துவது அல்லது கடத்துவது போன்ற காட்சிகளில் கட்டாய எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும்.

மேலும், போதைப்பொருள், மது மற்றும் புகையிலை பயன்பாட்டை நியாயப்படுத்தும் அல்லது பெருமைப்படுத்தும் காட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved